திருப்பூர் : திருப்பூர் மக்களின் நீண்ட நாள் கனவான அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை திட்ட ஆரம்ப பணிகள் துவங்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் காய்ச்சல், அறுவை சிகிச்சை, மகப்பேறு மற்றும் பல்வேறு பொது சிகிச்சைகளுக்காக சுமார் 2000 நோயாளிகள் மருத்துவமனையை அன்றாடம் நாடி வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட, திருப்பூர் மாவட்டம் தோற்றுவிக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆன நிலையில், திருப்பூரின் பனியன் தொழிலை நம்பி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தோடும், வடமாநில தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் தொடர்ந்து படையெடுத்து வரும் தமிழகத்தின் மிக முக்கிய தொழில் நகரமாக விளங்குகிறது.
இந்நிலையில், ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தொடங்குவதற்கு இந்திய மருத்துவ கழகம் அனுமதி வழங்கி உள்ள நிலையில், தற்போது இதையொட்டிய பணிகள் வெகு வேகமாக நடந்து வருகின்றன.
நகருக்குள் 10 ஏக்கர் நிலம் இருந்தால் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தொடங்கலாம். ஆனால் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 27 ஏக்கர் நிலம் உள்ளது. மேலும், 725 படுக்கை வசதிகளும் தற்போது உள்ளன.
தற்போதைய நிலையில், திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து உயர் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நோயாளிகள் அனுப்பப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக மாறும்போது, திருப்பூரிலேயே தரமான சிகிச்சை கிடைக்க பெறும்.
மேலும், பிறந்த குழந்தைகள் மற்றும் சிறுவர் சிறுமியருக்கு முன்கூட்டியே நோயின் தன்மையை கண்டறிவதற்கு தற்போது வசதிகள் இருந்தாலும், உயர்சிகிச்சைகாக கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை நாட வேண்டி உள்ளது. இதேபோன்று வேறு எந்த உயர் சிகிச்சைக்கும், குறிப்பாக தலைக்காயத்துக்கும் கோவைக்கு அனுப்பி வைக்க வேண்டி உள்ளது.
மருத்துவக்கல்லூரி வரும்பட்சத்தில், தலைக்காயத்துக்கு உயர்தர சிகிச்சை, கல் அடைப்பு மற்றும் திருப்பூர் போன்ற ஜவுளித்துறை தொழிலாளர்கள் நிறைந்த மாவட்டத்தில், பொதுமக்களுக்கு மிகவும் பாதிக்கப்படும் ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசம் மற்றும் நுரையீரல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் சிறப்பு மருத்துவ வல்லுநர்கள் அந்தந்த துறையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பார்கள்.
மேலும், மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக மாறும் போது 24 மணிநேரமும் அறுவை சிகிச்சை வசதி பொதுமக்களுக்கு கிடைக்கும். இதன்மூலம் மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்தும், வெளிமாவட்டங்களில் இருந்தும் அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் நேர விரயம் பெருமளவு குறைக்கப்பட்டு, உயிரிழப்பும் தடுக்க முடியும்.
இந்த நிலையில், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை திட்ட ஆரம்ப பணிகள் துவங்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் நிறைவடைந்து, பொதுமக்களுக்கு காலதாமதமின்றி சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பதே திருப்பூர் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.