கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசு முதன்மை செயலாளர்,/மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திரு.ஹர்மந்தர் சிங் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இவ்வாய்வுக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் ஷரவன்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரைமுருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், மாநகராட்சி துணை ஆணையர் பிரசன்னா ராமசாமி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் மேனகா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) உமாமகேஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசு முதன்மை செயலாளர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தெரிவித்ததாவது:
வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளதால் கோவை மாவட்டத்தில் மழையால் பாதிக்கக்கூடிய பகுதிகளை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். கழிவுநீர் ஒடைகளை சீர்செய்து, சாலைகளில் தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக்காலங்களில் கீழே விழும் மரங்களை உடனடியாக அகற்ற மரம் அறுக்கும் இயந்திரங்கள், மழை நீர் தேங்கும் இடங்களில் நீரை வெளியேற்ற மின்மோட்டார்கள் உள்ளிட்டவை தயார் நிலையில் இருக்கவேண்டும்.
மேலும், மழைநீர் சேகரிக்க ஏற்றவகையில் மாவட்டத்திலுள்ள பெரும்பாலான குளங்கள் மற்றும் குட்டைகள் தூர்வாரப்பட்டுள்ளது. ஆற்றங்கரையோரங்களில் உள்ள கிராமங்களில் உரிய முறையில் அறிவிக்கைகள் அளித்திட வேண்டும். மணல் மூட்டைகள் போதுமான அளவில் தயார் நிலையில் வைத்திட வேண்டும். மின்சார வாரிய அலுவலர்கள் மின்கம்பிகளிலுள்ள உள்ள பழுதுகள் உடனடியாக சரி செய்திட வேண்டும்.
பொது விநியோகத் திட்டத்தின்கீழ் விநியோகிக்கப்படும் பொருட்கள் போதிய அளவில் இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். சுகாதாரத்துறையினர் மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படா வண்ணம் சுகாதாரத்தினை பேணி காத்திட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவையான மருந்துகள் இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். மழை சேகரிப்பு குறித்து பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி மழைநீர் சேகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும். பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் முறையாக குளோரினேற்றம் செய்யப்பட்டு விநியோகிக்கப்படுவதை அலுவலர்கள் உறுதி செய்திடவேண்டும்.
சுகாதாரப்பணியாளர்கள் மற்றும் மஸ்தூர் பணியாளர்கள் மூலமாக டெங்கு காய்ச்சல் பரப்பும் ஏடீஎஸ் கொசுக்கள் உருவாக்கும் இடங்களான பயன்பாடற்ற பானைகள், பழைய டயர்கள், பிளாஸ்டிக்கள், செடிகள் வளர்க்கப்படும் தொட்டிகளின் வடிதட்டு, 01771/$91ர௩ 1௨4 உரல்கள், ஆட்டுக்கல், குளிர்சாதன பெட்டிகள், தேங்காய் சிரட்டைகள் ஆகிய தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்த அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொள்ளவேண்டும். மேலும், குப்பைகள் மற்றும் கழிவுகளை அப்புறப்படுத்தவும், தண்ணீர் தேங்காத வண்ணம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
பொது கட்டடங்கள், அலுவலகங்கள், பேருந்து நிலையங்கள், உணவகங்கள், திரையரங்குகள், திருமண மண்டபங்கள், கட்டுமான பணிகள் நடைபெற்றும் வரும் இடங்கள் போன்ற பகுதிகளை பார்வையிட்டு கொசு உற்பத்தியாகாமல் சுத்தமாக உள்ளனவாக என்று சம்மந்தப்பட்ட அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இதுபோன்ற இடங்கள் சுகாதாரமின்றி இருந்தால் உடனடியாக அபராதம் விதிக்கவேண்டும். மேலும் டெங்கு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். நகர மற்றும் கிராம பகுதிகள் என அனைத்து பகுதிகளிலும் வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொள்ளவேண்டும்.
அனைத்து அரசு அலுவலர்களும் பருவமழை காலம் முடியும்வரை தலைமையிடத்திலேயே தங்கி தங்கள் பணியினை மேற்கொள்ளவேண்டும். பொதுமக்கள் மழைக்காலங்களில் பாதுகாப்பாகவும் சுகாதாரமாகவும் இருக்க அனைத்துத்துறை அலுவலர்களும் ஒன்றிணைந்து பணியாற்றிட வேண்டும். என மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசு முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர்சிங் தெரிவித்தார்.

அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கென்று தனிசிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் சுழற்சி முறையில் பணியாற்றிடவும், தொடர் காய்ச்சலுடன் வரும் நோயாளிகளை 24மணி நேரமும் தொடர்ந்து கண்காணித்திடவும், மருத்துவமனையில் போதுமான அளவு மருந்துகள் இருப்பில் வைக்கவும் அரசு மருத்துவமனை முதல்வர் அவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசு முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர்சிங், அவர்கள் அறிவுரை வழங்கினார்.
மேலும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில், அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கான, டெங்கு நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சை முறைக்கான கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.