24 மணி நேர குடிநீர்‌ திட்டம் : குடிநீர்தர கட்டுப்பாட்டு ஆய்வகத்தின்‌ செயல்பாடு குறித்து ஆய்வு

கோவை : கோவை மாநகராட்சி அவினாசிலிங்கம்‌ கல்லூரி சாலையிலுள்ள பாரதி பூங்காவில்‌ 24 மணி நேர குடிநீர்‌ திட்டத்திற்கான குடிநீர்தரக்‌ கட்டுப்பாட்டு ஆய்வகத்தின்‌ செயல்பாடுகளை நகராட்சி நிர்வாகம்‌ மற்றும்‌ குடிநீர்‌ வழங்கல்‌ துறை அரசு முதன்மைச்செயலாளர்‌ ஹர்மந்தர் சிங்‌, நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை : கோவை மாநகராட்சி அவினாசிலிங்கம்‌ கல்லூரி சாலையிலுள்ள பாரதி பூங்காவில்‌ 24 மணி நேர குடிநீர்‌ திட்டத்திற்கான குடிநீர்தரக்‌ கட்டுப்பாட்டு ஆய்வகத்தின்‌ செயல்பாடுகளை நகராட்சி நிர்வாகம்‌ மற்றும்‌ குடிநீர்‌ வழங்கல்‌ துறை அரசு முதன்மைச்செயலாளர்‌ ஹர்மந்தர் சிங்‌, நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர்‌ கு.ராசாமணி அவர்கள்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார ஜடாவத்‌, மாநகராட்சி துணை ஆணையாளர்‌ ச.பிரசன்னா ராமசாமி ஆகியோர்‌ கலந்து கொண்டனர்.



பின்னர்‌, கோவை மாநகராட்சி புரூக்‌ பீல்டு சாலையில்‌ நவீன மின்னணு கருவிகள்‌ உதவியுடன்‌ பூமிக்கு அடியில்‌ பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களில்‌ எங்கேனும்‌ பழுதுகள்‌ ஏற்படும்போது அதன்‌ மூலம்‌ நாக்கசிவுகள்‌ வெளியாகும்போது, நீர்க்கசிவு ஏற்படும்‌ இடத்தில்‌ தோண்டி சரிசெய்வதற்கு ஏதுவாக, நாக்கசிவு குடிநீர் குழாயில்‌ ஏற்படும்‌ இடத்தை துல்லியமாக கண்டறியும்‌ கருவியின்‌ (Acoustic Technology) செயல்பாடுகளையும்‌, புரூக்‌ பீல்டு சாலையில்‌ மழையின்‌ காரணமாக கழிவுநீர் ‌கால்வாயில்‌ தேங்கியுள்ள குப்பைகளை மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள்‌ தூய்மைப்படுத்தும்‌ பணிகளில்‌ ஈடுபடுவதையும்‌ நகராட்சி நிர்வாகம்‌ மற்றும்‌ குடிநீர் வழங்கல்‌ துறை அரசு முதன்மைச்செயலாளர்‌ ஹர்மந்தர் சிங்‌, நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, மாநகரப்‌ பொறியாளர்‌ ஆ.லட்சுமணன்‌, மேற்கு மண்டல உதவி ஆணையாளர்‌ ஏ.ஜே.செந்தில்‌அரசன்‌, செயற்பொறியாளர்‌ சரவணகுமார்‌ மற்றும்‌ அலுவலர்கள்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....