கோவை : கோவை மாநகராட்சி அவினாசிலிங்கம் கல்லூரி சாலையிலுள்ள பாரதி பூங்காவில் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குடிநீர்தரக் கட்டுப்பாட்டு ஆய்வகத்தின் செயல்பாடுகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச்செயலாளர் ஹர்மந்தர் சிங், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார ஜடாவத், மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர், கோவை மாநகராட்சி புரூக் பீல்டு சாலையில் நவீன மின்னணு கருவிகள் உதவியுடன் பூமிக்கு அடியில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களில் எங்கேனும் பழுதுகள் ஏற்படும்போது அதன் மூலம் நாக்கசிவுகள் வெளியாகும்போது, நீர்க்கசிவு ஏற்படும் இடத்தில் தோண்டி சரிசெய்வதற்கு ஏதுவாக, நாக்கசிவு குடிநீர் குழாயில் ஏற்படும் இடத்தை துல்லியமாக கண்டறியும் கருவியின் (Acoustic Technology) செயல்பாடுகளையும், புரூக் பீல்டு சாலையில் மழையின் காரணமாக கழிவுநீர் கால்வாயில் தேங்கியுள்ள குப்பைகளை மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபடுவதையும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச்செயலாளர் ஹர்மந்தர் சிங், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், மேற்கு மண்டல உதவி ஆணையாளர் ஏ.ஜே.செந்தில்அரசன், செயற்பொறியாளர் சரவணகுமார் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.