தேசிய அளவில் நடைபெற்ற ஓவிய போட்டி : உதகை பள்ளி மாணவன் முதலிடம் பிடித்து சாதனை

நீலகிரி : உதகை கிரசெண்ட் பள்ளி மாணவன் தேசிய அளவில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

நீலகிரி : உதகை கிரசெண்ட் பள்ளி மாணவன் தேசிய அளவில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகை விவேகநந்த நகர் பகுதியை சேர்ந்த ஆசிரியை ஷர்மிளா. இவரது மகன் ஆலன் யோகன்(15) ஊட்டியில் உள்ள கிரசெண்ட் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் 20-ம் தேதி சென்னையில் நடைபெற்ற மண்டல அளவிலான ஓவியப் போட்டியில் கலந்து கொண்டு மாநில அளவில் முதல் இடத்தை பிடித்தார்.



இதையடுத்து, கடந்த 19-ம் தேதி ஆந்திர மாநிலம் ஐதராபாத் ராமோஜி திரைபட நகரில் நடைபெற்ற தேசிய அளவிலான ஓவியப் போட்டியில் நாடு முழுதிலிருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில், ஆலன் யோகன் இயற்கை காட்சிகளை சிறப்பாக ஓவியம் தீட்டி முதல் பரிசை தட்டி சென்றார். தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன் மாணவனுக்கு கோப்பையை வழங்கி கௌரவித்தார்.

தென்னிந்திய அளவில் இதுவரை யாரும் முதல் பரிசை வெல்லாத நிலையில், உதகை மாணவன் தேசிய அளவில் முதல் பரிசை வென்றதை பொதுமக்கள் பாராட்டினர். இதுகுறித்து மாணவனின் தாய் ஷர்மிளா கூறுகையில், "ஆலன் சிறுவயதிலிருந்தே நன்றாக ஓவியம் வரைவான் மாவட்ட அளவில் நடைபெற்ற ஓவியப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் வென்றுள்ளான். ஆனால், தேசிய அளவில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் முதல் இடம் பிடித்தது பெருமையாக உள்ளது " என்று கூறினார்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....