ரயில்வே துறை தனியார் மயமாக்கலை கண்டித்து ரயில்வே அமைச்சக அரசாணை நகலை எரித்து போராட்டம்

கோவை : ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசை கண்டித்து, ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட அரசாணை நகலை எரித்து எஸ்.ஆர்.எம்.யு தொழிற்சங்கத்தினர் கோவை ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை : ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசை கண்டித்து, ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட அரசாணை நகலை எரித்து எஸ்.ஆர்.எம்.யு தொழிற்சங்கத்தினர் கோவை ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தியா முழுவதும் உள்ள 50 இரயில் நிலையங்கள் மற்றும் 150 அதிவிரைவு ரயில்களை தனியார் மயமாக்கும் விதமாக கடந்த 10ம் தேதி மத்திய ரயில்வே அமைச்சகம் அரசாணையை வெளியிட்டது. இந்த அரசாணை ரத்து செய்ய வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யு மற்றும் ஏ.ஐ.ஆர்.எப் தொழிற்சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதன் ஒரு பகுதியாக, இன்று கோவை ரயில் நிலையத்தில் உள்ள கூட்செட் சாலையில் ரயில் நிலையம் மற்றும் ரயில்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டும், கட்டாய ஓய்வூதியம் நிறுத்தப்படுவதை வலியுறுத்தக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யு மற்றும் ஏ.ஐ.ஆர்.எப் தொழிற்சங்கத்தினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது, மத்திய அரசின் தனியார் மயமாக்கும் அரசாணை நகலை அவர்கள் தீயிட்டு கொழுத்தி அவர்கள், மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். மேலும், கோரிக்கை மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...