நீருயர நெல்லுயரும்… நிரம்பி வழியும் கோவை குளங்கள் : சிறுதுளி பெருமிதம்

கோவை : கோவையின் நீர்நிலைகளைத் திறம்பட தூர்வாரி உயிர்ப்பிக்கும் பணியை சிறுதுளி அமைப்பு கடந்த 16 வருடங்களாக சிறப்பாகச் செயல்படுத்தி வருகின்றது. கடந்த இரண்டு ஆண்டுகளில் சிறுதுளி தூர்வாரிய கோவையின் மிக முக்கியமான குளங்களான குமரன் குட்டை, கன்னிமார் குட்டை, அய்யன் குட்டை ஆகியவை தென் மேற்கு மற்றும் வட கிழக்குப் பருவ மழைப் பொழிவால் நிரம்பியுள்ளது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கோவை : கோவையின் நீர்நிலைகளைத் திறம்பட தூர்வாரி உயிர்ப்பிக்கும் பணியை சிறுதுளி அமைப்பு கடந்த 16 வருடங்களாக சிறப்பாகச் செயல்படுத்தி வருகின்றது. கடந்த இரண்டு ஆண்டுகளில் சிறுதுளி தூர்வாரிய கோவையின் மிக முக்கியமான குளங்களான குமரன் குட்டை, கன்னிமார் குட்டை, அய்யன் குட்டை ஆகியவை தென் மேற்கு மற்றும் வட கிழக்குப் பருவ மழைப் பொழிவால் நிரம்பியுள்ளது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து மாதம்பட்டியைச் சேர்ந்த விவசாயி தங்கவேலு கூறுகையில், இந்த குமரன் குட்டை முப்பது வருடங்களாக மண் மேடாக இருந்த நிலையில், சிறுதுளி அமைப்பு இந்தக் குளத்தை சிறப்பாக தூர்வாரி, ஆழப்படுத்தி, கரைகளைப் பலப்படுத்திய பிறகு கடந்த மழையில் 60% நிறைந்த நிலையில், தற்போது குளம் முழுவதும் நிரம்பியுள்ளதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளதாகவும் சிறுதுளிக்கு மிக்க நன்றி என்று கூறினார்.



இதற்கு முக்கிய காரணமாக சிறுதுளிக்குத் தேவையான அனுமதியும் ஒத்துழைப்பும் கொடுத்த நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் கோவை மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். குமரன் குட்டை, கன்னிமார் குட்டை, அய்யன் குட்டை மூன்றும் கோவையின் மேற்கு பகுதியில் பல்வேறு கிராமங்களுக்கு உரியது. இப்பகுதியின் மண் நல்ல விளைச்சல் தரக்கூடிய வளமிக்கது. ஆனால் குளங்கள் தூர்வாரப்படாமல் இருந்ததால் போதுமான அளவு நீர் சேமிக்க முடியாமல் இருந்தது. ஆனால் இப்போது மழையும் கை கொடுத்து சிறுதுளியின் முயற்சியால் முழுக் கொள்ளவை எட்டி விவசாயிகளின் முகத்தில் மகிழ்ச்சியைக் காண்பது நிறைவளிக்கிறது.



மேலும், இந்தக் குளங்களை தூர்வார நிதியுதவி அளித்த ராபர்ட் போஸ்ச் இன்ஜினியரிங் இந்தியா, பேக்கர் ஹ்யூக்ஸ், ரூட்ஸ் குழுமம், கிராப்ட்ஸ்மேன் ஆட்டோமேசன், ரோட்டரி க்ளப் ஆஃப் கோயம்புத்தூர் மெட்ரோபாலிஸ், மாதம்பட்டி விவசாயிகள் சங்கம் ஆகியோருக்கும் இத்தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்ந்து கோவையின் நீராதாரங்களை மேம்படுத்திப் பாதுகாக்கும் பணியில் உற்சாகத்துடன் பயணிப்போம் என சிறுதுளி அமைப்பினர் தெரிவித்தனர். 

Newsletter

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...