வெளிநாடு சுற்றுலா அழைத்துச் செல்வதாக கூறி ரூ 79 லட்சம் மோசடி செய்த நபர் கைது

கோவை : கோவையில் இருந்து வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாக கூறி ரூ.6 லட்சம் வரை மோசடி செய்த தனியார் டிராவல்ஸ்‌ ஏஜென்சி நிறுவனர் சுரேஷ்குமாரை கைது செய்த போலீசார் அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

கோவை : கோவையில் இருந்து வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாக கூறி ரூ.6 லட்சம் வரை மோசடி செய்த தனியார் டிராவல்ஸ்‌ ஏஜென்சி நிறுவனர் சுரேஷ்குமாரை கைது செய்த போலீசார் அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

கோவை மாநகர்‌ பிளமேரு ஹோப்காலேஜ்‌ பகுதியில்‌ உள்ள ஸ்ரீநகரில்‌ வசித்து வரும்‌ முத்துக்குமாரசாமி என்பவர்‌ வங்கியில்‌ பணியாற்றி ஓய்வு பெற்றவர்‌. இவர்‌ தனது குடும்பத்துடன்‌ அந்தமான்‌ தீவுக்கு சுற்றுலா செல்வதற்காக கடந்த ஏப்ரல்‌ மாதம்‌ கோவை காந்திபுரம்‌ சித்தாபுதூரில்‌ இயங்கி வரும்‌ தனவர்ஷா டூர்ஸ்‌ அண்ட் டிராவல்ஸ்‌ என்ற நிறுவனத்தை நடத்தி வந்த சுரேஷ்குமார்‌ என்பவரை அணுகியுள்ளார்.

அப்போது, சுரேஷ்குமார் கடந்த 10 ஆண்டுகளாக தான்‌ இந்தியாவில்‌ சீரடி, குளுமனாலி, அந்தமான்‌ நிகோபர்‌ தீவுகள்‌ மற்றும்‌ துபாய்‌, சிங்கப்பூர்‌, மலேசியா, தாய்லாந்து, போன்ற வெளிநாட்டிற்கும்‌ குறைந்த செலவில்‌ அழைத்து செல்வதாக சொல்லி நம்பிக்கை ஏற்படுத்தி ஒரு நபருக்கு ரூபாய்‌ 40,000/ வீதம்‌ பணம்‌ செலுத்தும் படியும்‌ உடனே பணம்‌ கட்டினால்‌ சலுகை விலையில்‌ அழைத்துச்‌ செல்வதாக ஆசை வார்த்தை கூறியதால்‌ உடனே சுரேசின்‌ வங்கிக்கணக்கிற்கு இரண்டு தவணைகளில்‌ ரூபாய்‌ 3,47,500/ பணம்‌ கட்டியதாகவும்‌ செப்டம்பர்‌ மாதம்‌ 21ம்‌ தேதியன்று நேரில்‌ வந்து பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம்‌ என்று சுரேஷ் கூறியுள்ளார்.

ஆனால், முத்துக்குமாரசாமி நேரில்‌ சென்று பார்த்தபோது, தனவர்ஜா ரூர்ஸ்‌ டிராவல்ஸ்‌ அலுவலகம்‌ பூட்டியிருந்ததாகவும்‌ சுரேசுக்கும்‌ அலுவலகத்தில்‌ வேலை செய்த சிலரையும்‌ செல்போனில்‌ தொடர்பு கொண்டபோது செல்டபோன்‌ சுவிட்ச்‌ ஆப்‌ செய்யப்பட்டிருந்துள்ளது. மேலும், தன்னைப்போல பலர்‌ வெளிநாட்டிற்குச் சுற்றுலா செல்வதற்கு டிக்கெட்‌ வாங்க வந்து காத்திருந்ததாகவும்‌ தாங்கள்‌ ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கோவை மாநகர காவல்‌ ஆணையாளர்‌ அவர்களிடம்‌ புகார்‌ கொடுத்துள்ளனர்.

இதையடுத்து, கோவை மாநகர காவல்‌ ஆணையாளர்‌ சுமித்சரன்‌ அவர்கள்‌ உத்தரவின்படி, கோவை மாநகர குற்றப்பிரிவில்‌ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில்‌ சுமார்‌ 600க்கும்‌ மேற்பட்ட உள்ளூர் மற்றும்‌ வெளியூரில்‌ இருந்து வந்த நபர்கள்‌ தாங்கள்‌ ரூபாய்‌ 12,500/ முதல்‌ இரண்டு லட்சம்‌ வரை சுற்றுலா செல்ல ரூபாய்‌ 6 கோடிக்கும்‌ மேல்‌ பணம்‌ கட்டியிருந்தது தெரியவந்தது.

இந்த நிலையில், மாநகர காவல்‌ ஆணையாளர்‌ சுமித்சரன்‌ அவர்கள்‌ உத்தரவின்படி, தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார், தனவர்ஷா டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ்‌ உரிமையாளர்‌ சுரேஷ்குமார்‌(49), அவரது மனைவி மகேஸ்வரி(43) ஆகியோரை கைது செய்து கோவை மத்திய சிறையில்‌ அடைத்தனர்‌.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...