ஏ.டி.எஸ் கொசு வடிவில் பட்டத்தை பறக்க விட்டு விழிப்புணர்வை ஏற்படுத்திய யு.எம்.டி ராஜா

கோவை : ஏ.டி.எஸ் கொசுக்கள் மூலம் டெங்கு காய்ச்சல் பரவுவதை கட்டுபடுத்த பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தங்க நகை பட்டறை தொழிலாளி யு.எம்.டி ராஜா கோவை வ.ஊ.சி மைதானத்தில் ஏ.டி.எஸ் கொசு வடிவில் பட்டங்களை பறக்க விட்டார்.

கோவை : ஏ.டி.எஸ் கொசுக்கள் மூலம் டெங்கு காய்ச்சல் பரவுவதை கட்டுபடுத்த பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தங்க நகை பட்டறை தொழிலாளி யு.எம்.டி ராஜா கோவை வ.ஊ.சி மைதானத்தில் ஏ.டி.எஸ் கொசு வடிவில் பட்டங்களை பறக்க விட்டார்.

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த தங்க நகை பட்டறை தொழிலாளி யு.எம்.டி ராஜா, அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வடிவங்களில் சிற்பங்கள் செய்வது வழக்கம். மைக்ரோ அளவில் தங்கத்தின் மூலம் பொங்கலின் போது ஜல்லிக்கட்டு விளையாட்டு வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வண்ணம் காளைகளை வடிவமைத்திருந்தார்.

மேலும், சிறிய அளவிலான உலக கோப்பை, எம் ஜி ஆர் நூற்றாண்டை முன்னிட்டு எம் ஜி ஆர் உருவம் மற்றும் கருணாநிதி உருவம், இயேசுவின் சிலைகளை மூன்று பென்சில்களின் முனையில் வைத்து தேவாலயத்தின் மீது இயேசு இருப்பதைப்போல் வடிமைத்திருந்ததார்.

இந்நிலையில், தற்போது ஏ.டி.எஸ் கொசுக்கள் மூலம் டெங்குகாய்ச்சல் பரவுவதை கட்டுபடுத்த பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பட்டங்களை பறக்க விட்டார்.

கோவை வ.ஊ.சி மைதானத்தில் பட்டங்களை பறக்க விட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசு அறிவிக்கும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை பொதுமக்கள் சரியாக பின்பற்றுவதில்லை எனவும் டெங்கு கொசுக்கள் மூலம் ஏற்படுத்தும் பாதிப்புகள் மக்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த டெங்கு கொசுக்கள் போல் வடிவமைத்து வாசகங்கள் எழுதப்பட்ட பட்டங்களை பறக்க விட்டதாக தெரிவித்தார். மேலும், மக்கள் மனது வைத்தால் மட்டுமே டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....