திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை : ரூ.82 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்

திருப்பூர் : திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத 82 ஆயிரத்து ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருப்பூர் : திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத 82 ஆயிரத்து ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று மாலை திடீரென லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஆறு பேர் கொண்ட குழுவாக சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் அலுவலகம் மட்டுமல்லாது அலுவலர்களின் இருசக்கர வாகனம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலுமே சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் பொங்குபாளையம் ஊராட்சி செயலாளர் தமிழரசன் என்பவரிடமிருந்து 56 ஆயிரம் ரூபாய் உட்பட 82 ஆயிரத்து 875 ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தீபாவளிக்கு இன்னும் மூன்று தினங்களே உள்ள நிலையில், தீபாவளி அன்பளிப்பாக அதிகாரிகள் பணமாகவோ, பொருளாகவோ பெறலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் மேற்கொண்ட இந்த சோதனையால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...