இந்து கடவுள்களை அவதூறாக பேசிய வழக்கு : காரப்பன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

கோவை : காரப்பன் சில்க்ஸ் உரிமையாளர் காரப்பன் இந்து கடவுள்களான கிருஷ்ணர் மற்றும் அத்திவரதர் குறித்து அவதூறாக பேசிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியதையடுத்து எழுந்த புகாரின் பேரில் காரப்பன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


கோவை : காரப்பன் சில்க்ஸ் உரிமையாளர் காரப்பன் இந்து கடவுள்களான கிருஷ்ணர் மற்றும் அத்திவரதர் குறித்து அவதூறாக பேசிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியதையடுத்து எழுந்த புகாரின் பேரில் காரப்பன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை சிறுமுகை பகுதியைச் சேர்ந்தவர் காரப்பன் (70). இவர் அதே பகுதியில் காரப்பன் சில்க்ஸ் என்ற துணிக்கடை வைத்துள்ளார். இவர் கடந்த மாதம் 29ம் தேதி கோவை நவ இந்தியா பகுதியில் நடந்த திராவிடம் 100 என்ற கருத்தரங்கில் இந்து கடவுள்களான கிருஷ்ணர் மற்றும் அத்திவரதர் குறித்து அவதூறாக பேசியுள்ளார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது .

இந்நிலையில், கடந்த 19ம் தேதி இந்து முன்னணியைச் சேர்ந்த நிர்மல்குமார் என்பவர் பீளமேடு காவல் நிலையத்தில் காரப்பன் மீது புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து, சமூக நல்லிணக்கத்துக்குச் சவால் விடும் வகையிலும், மத வன்முறையை தூண்டும் வகையிலும் பேசிய காரப்பனை கைது செய்ய வலியுறுத்தி பாஜக சார்பில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 21ம் தேதி புகார் மனு அளிக்கப்பட்டது.

இதையடுத்து, மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் உத்தரவின்படி, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில், மத உணர்வை தூண்டுதல் (505(1)(b)), குறிப்பிட்ட மதத்தை குறித்து இழிவாகப் பேசுதல் (295(a)) ஆகிய இரு பிரிவுகளின் கீழ் பீளமேடு காவல்துறையினர் காரப்பன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், இந்து கடவுள்களை தவறுதலாக பேசி விட்டேன் இனிமேல் இதுபோன்று நடந்து கொள்ள மாட்டேன் என சமூக வலைத்தளத்தில் காரப்பன் வருத்தம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...