கோவை : தீபாவளியை முன்னிட்டு, தமிழ்நாடு தீயணைப்புத் துறையின் நிலை மற்றும் பயணிகள் பிரிவு அலுவலகம் சார்பில் தீபாவளி பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி கோவை புலியகுளத்தில் உள்ள 10 அடுக்குமாடி குடியிருப்பான அரிமா சைப்ரஸ் ஓக் பகுதியில், அரிமா கன்ஸ்ட்ரசன் நிறுவனத்தின் உதவியோடு நேற்று நடத்தினர்.

எதிர்பாராதவிதமாக ஏற்படும் தீ விபத்தின்போது, கோவை வாழ் மக்களுக்கு எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவும், முதலுதவி பயிற்சி அளிக்கவும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த ஒத்திகை நிகழ்ச்சியின்போது, தீ தடுப்பு மற்றும் மீட்பு முறைகள், தீ அணைப்பு கருவிகளை கையாளும் விதம், தண்ணீரை செலுத்தும் முறை, லிப்ட்டில் தீ விபத்து ஏற்பட்டால் கையாளும் முறை, தெளிப்பு முறையில் தீயை கட்டுப்படுத்துதல் போன்றவை விளக்கம் தரப்பட்டன. மேலும், தீ விபத்தின் போது மீட்பு முறைகள், தீ பற்றிய விழிப்புணர்வு குறிப்புகள் மற்றும் கையாளும் முறை, பாதுகாப்ப முறைகள் பற்றி இந்த குடியிருப்பு மக்களுக்கு விரிவாக விளக்கம் தரப்பட்டன.

தீயணைப்புத் துறையானது கடந்த 2001 ம் ஆண்டுக்கு முன்புவரை தீ விபத்து சேவைகளை மட்டுமே செய்து வந்தது. 2001 – ம் ஆண்டு முதல் தீயணைப்பு சேவை மற்றும் மீட்பு சேவையையும் சேர்த்து பணி செய்து வருகின்றது.
பீளமேடு தீயணைப்பு நிலைய அதிகாரி முத்துக்குமாரசாமி, ஒத்திகை நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசுகையில், தீ விபத்தின்போது எப்படி செயல்பட வேண்டும் என்பதை கற்றுக் கொள்ள ஒருவர் நேரடியாக காண்பது தான் சிறந்த வழி. அவசர காலங்களில் எப்போதுமே தீயணைப்பு துறையினரை அழைப்பது நல்லது என்றார்.

மேலும், தீ விபத்து ஏற்பட்ட ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களில் வீட்டை விட்டு வெளியே வந்து விட வேண்டும். இந்த விசயத்தை நமது குழந்தைகளுக்கும் சொல்லித்தர வேண்டும். தீ விபத்து ஏற்பட்டவுடன் அதன் அருகில் தீப்பிடிக்கக் கூடிய பொருட்களை அகற்றிவிட வேண்டும் என்றார்.
அரிமா கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எஸ்.ஆர் அரவிந்த் குமார் பேசுகையில், பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் எங்களது பல்வேறு கட்டுமான திட்டங்களில், பாதுகாப்பு கருவிகளை பொருத்த முன்னுரிமை அளித்து வருகிறோம். தற்போது குடியிருப்பு வாழ் மக்களுக்கு, நாங்கள் அளித்திருக்கும் தீ தடுப்பு பாதுகாப்பு கருவிகள், தீயணைப்பு கருவிகள், தீ ஹோஸ் மற்றும் அலாரம்களை எவ்வாறு பயன்படுத்த பயிற்சியும், விழிப்புணர்வையும் அளித்துள்ளோம் என்றார்.