கோவை : கர்நாடகா, புதுச்சேரி அரசுகளைப் போல தமிழக அரசும் இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் வருடம் தோறும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் சட்டம் பயின்று புதிய இளம் வழக்கறிஞர்களாக தொழிலுக்கு வருவதாகவும் பெரும்பாலானோர் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பின் தங்கிய பகுதியிலிருந்து வருவதால் வழக்கறிஞர் தொழிலில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட குறைந்தபட்ச உத்தரவாத வருமானம் 5000 வழங்கிட அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் இதுகுறித்து அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், கர்நாடகா அரசு இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் 2000 ரூபாயும், புதுச்சேரி அரசு 3000 ரூபாயும் வழங்கி வருகிறது. தற்போது அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில், இது மேலும் அதிகரிக்கப்பட்டு ஐந்தாயிரமாக வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளதாக கூறினர்.
மேலும், கேரளா மற்றும் ஆந்திர மாநில அரசுகள் இளம் வழக்கறிஞர்களுக்கு ஐயாயிரம் உதவித் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ள நிலையில், தமிழகத்திலும் இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கிட அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு, உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.