திருப்பூர் : திருப்பூர் அருகே குடிபோதையில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த போலிசாரை பொதுமக்கள் முற்றுகையிட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி எல்லைக்குட்பட்ட பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் மயில்சாமி (36). அவர் நேற்று மாலை தனது இருசக்கர வாகனத்தில் அவிநாசி அருகே செல்லும்போது, சாலையில் நடந்து சென்ற பெண்ணின் மீது மோதிவிட்டு விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றுள்ளார். சிறிது தூரம் துரத்திச் சென்ற பொதுமக்கள், அவரை மடக்கிப்பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அவர் குடிபோதையில் இருந்தது தெரிந்தது. உடனடியாக பொதுமக்கள் அவிநாசி காவல்துறையினருக்குத் தகவல் அளித்து மயில்சாமியை அவினாசி காவல்துறையினரிடம், றையினரிடம் ஒப்படைத்தனர். காவலர் ஒருவர் குடிபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய சம்பவம் அவிநாசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.