உதகை மலை ரயில் சேவை அக்., 24ம் தேதி வரை ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு

மேட்டுப்பாளையம் ரயில் பாதை சீரமைப்பு பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உதகை மலை ரயில் இன்று முதல் மூன்று நாட்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேட்டுப்பாளையம் ரயில் பாதை சீரமைப்பு பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உதகை மலை ரயில் இன்று முதல் மூன்று நாட்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினசரி இயக்கப்படும் மலை ரயில் போக்குவரத்து யுனஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரிய சின்னம். அடந்த வனத்தில் பயணித்து காடுகளில் உள்ள இயற்கை அழகினை ரசிக்க இதற்கென தனி மகத்துவம் உண்டு. இந்த நிலையில், வட கிழக்கு பருவமழை துவங்கியது முதலே மலை ரயில் பாதை அமைந்துள்ள மேட்டுப்பாளையம், கல்லார் பகுதியில் கன மழை பெய்து வருகிறது. இதனால் மலைரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்ட காரணத்தால் கடந்த 18 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டது. 

இதன் பின்னர் நேற்று வழக்கமான ரயில் போக்குவரத்து துவங்கிய நிலையில், மீண்டும் கல்லார் ஹில்கிரோ ரயில்நிலையம் இடையே மன்சரிவு ஏற்பட்டது. இதன்காரனமாக ரயில் போக்குவரத்து தடைபட்டது.

இதனை தொடர்ந்து சீரமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வந்தாலும் பருவமழை தீவிரமாகப் பெய்து வருகிறது. எனவே சீரமைப்பு பணி காரணமாகவும் மேலும் தீவிரமடையும் பருவமழையால் மேலும் மலை ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்படும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேலும் மூன்று நாட்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி 22,23,24 ஆகிய தேதிகள் வரை மூன்று நாட்கள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் மலை ரயிலுக்கான ஆண்லைன் முன்பதிவும் மூன்று நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...