சாலை விதிகளை மீறும் பெற்றோர்களுக்கு புதிய செக் : பள்ளி குழந்தைகளின் குட்டி காப்ஸ் திட்டம் துவக்கம்

கோவை : சாலை விதிகளை மீறும் பெற்றோர்களை கட்டுப்படுத்தும் வகையில் பள்ளி குழந்தைகளுக்கு அந்த விதிகளை கற்றுக்கொடுக்கும் குட்டி காப்ஸ் திட்டம் கோவையில் துவங்கப்பட்டுள்ளது.

கோவை : சாலை விதிகளை மீறும் பெற்றோர்களை கட்டுப்படுத்தும் வகையில் பள்ளி குழந்தைகளுக்கு அந்த விதிகளை கற்றுக்கொடுக்கும் குட்டி காப்ஸ் திட்டம் கோவையில் துவங்கப்பட்டுள்ளது.

விபத்தில்லா கோவை என்ற திட்டத்தின் கீழ் கங்கா மருத்துவமனை மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து உயிர் என்ற அமைப்பை நடத்தி வருகின்றனர். சாலை விதிகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல், விபத்தில்லா சாலைகளை உருவாக்க நிகழ்ச்சிகளை நடத்துதல் உள்ளிட்ட பணிகளில் இந்த அமைப்பு ஈடுபட்டு வருகின்றது.



இதன் ஒரு பகுதியாக, சாலை விதிகளை மீறும் பெற்றோர்களை கட்டுப்படுத்தவும், அதனை அவர்கள் சரியாக மேற்கொள்ளவும் வலியுறுத்தும் வகையில், பள்ளி குழந்தைகளுக்கு சாலை விதிகளை பயிற்றுவிக்கும் குட்டி காப்ஸ் என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக பிரத்யேக கையேடு தயாரிக்கப்பட்டு பள்ளி தலைமையாசிரியர்கள், தாளாளர்கள் மூலம் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் திட்டத்தின் துவக்க நிகழ்ச்சி கோவை மேட்டுப்பாளையம் சாலை கங்கா மருத்துவமனையில் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவண் குமார் ஜடாவத், கோவை மாநகர துணை காவல் ஆணையர் பாலாஜி சரவணன், கோவை மாவட்ட கல்வி அலுவலர் கீதா, கங்கா மருத்துவமனை தலைவர் ராஜசேகர், உள்ளிட்டோர் கலந்து கொண்டு கையேடுகளை வெளியிட்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன் குமார், இத்திட்டம் கோவை மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பரவ வேண்டும் என வாழ்த்தினார். மாநகர துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் கூறும் போது பெரும்பாலான விபத்துக்கள் விதிகளை மீறுவதாலேயே நடைபெறுவதாகவும், குழந்தைகளுக்கு இந்த விதிகளை பயிற்றுவிப்பதால் பெற்றோருடன் அவர்கள் பயணிக்கும் போது இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை அவர்கள் சுட்டிக்காட்டி சரிபடுத்தும் வாய்ப்பு ஏற்படும் எனவும் தெரிவித்தார்.



பின்னர் பேசிய கல்வி அலுவலர் கீதா, மாணவர்கள் தவறு செய்யாமல் இருக்க பழக்கப்படுத்தும் போது தவறுகளை மற்றவர்கள் செய்வதும் தவிர்க்கப்படும் எனவும் அவர்கள் நல்ல குடிமக்களாக மாற இத்திட்டம் வாய்ப்பை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்தார்.



குட்டி காப்ஸ் திட்ட கையேடுகள் 6 முதல் 8ம் வகுப்பு, 8 முதல் 10ம் வகுப்பு என முப்பருவ முறையில் உருவாக்கப்பட்டு மாணவர்களுக்கு புத்தகம், படக்காட்சிகள் வாயிலாக பயிற்றுவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....