நீலகிரி : உதகை அருகே உள்ள முள்ளிக்கொரை மற்றும் தீட்டுக்கல் பகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சரியான மின் வினியோகம் இல்லாததால் அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

உதகை அருகே இரு கிராமங்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் வாரத்திற்கு நான்கு நாட்கள் மின் இணைப்பு இருப்பதில்லை என இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், வனப்பகுதி வழியாக இவர்களுக்கு மின் வினியோகம் செய்யப்படுவதும், மழை மற்றும் காற்றில் சிறு பிரச்சினை என்றாலும் மின் வினியோகம் முற்றிலும் தடை படுவதாகவும் கூறினார். மேலும், மின்தடை ஏற்படுவதால் குழந்தைகளுக்கு படிக்கவும், இல்லங்களில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளும் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் கூறினர்.
எனவே, சீரான மின் வினியோகம் செய்ய நகரப்பகுதிகளிலிருந்து மின்வழி இணைப்பை இந்த இரு கிராமங்களுக்கும் தர வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.