கோவை : கோவை மாவட்டம் கிணத்துகடவு பகுதியை சேர்ந்த கருப்புசாமி என்பவர் தன்னை ஏமாற்றி குழந்தையை பெற்று விற்பனை செய்து விட்டதாகவும் தனது குழந்தையை மீட்டு தர வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கருப்புசாமி கூறுகையில், தென்காசியை சேர்ந்த தனக்கு ரம்யா என்பவருடன் திருமணம் நடைபெற்று கோவையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாகவும் கடந்த 11.05.18 தேதியன்று தனது மனைவி ரம்யாவிற்கு கோவை அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்ததாக கூறினார்.
இந்த நிலையில், மனைவியால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து பராமரிக்க முடியாத காரணத்தால் தனது முதலாளியான பாலுவிடம் ஆலோசனை கேட்டு உள்ளார். அவர் தனது ஓட்டுனரான செந்தில் (எ) கார்த்தியிடம் அறிமுகம் செய்து வைத்ததாகவும் அவர் குழந்தையை 2.6.19 தேதியன்று பெற்று சென்று, தனது நண்பரான முருகன் என்பவரை அழைத்து வந்து தன்னிடம் வெள்ளைத் தாளில் கையெழுத்து வாங்கி சென்றதாக தெரிவித்தவர், மனைவி உடல் நலம் தேறி வந்த நிலையில் குழந்தையை கேட்டபோது, குறிஞ்சேரி பகுதியை சேர்ந்த குப்புசாமி-சண்முகபிரியா தம்பதியினருக்கு 40,000 ரூபாய்க்கு குழந்தையை விற்று விட்டதாக குற்றம் சாட்டினார்.
மேலும், குழந்தையை திருப்பி கேட்டால் கொன்று விடுவேன் என்று தன்னையும் தன் மனைவியையும் மிரட்டுவதாக கூறினார். இந்நிலையில் உடல்நலம் தேறி வந்த தனது மனைவி ரம்யா கடந்த 20.7.19 தேதியன்று இறந்து விட்டதாகவும் குழந்தையை தானே வளர்க்க ஆசைப்படுவதாகவும் ஆனால் குழந்தையை திருப்பி தர மறுத்து தன்னை மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து குழந்தையை மீட்டு தர வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாக தெரிவித்தார்.
இது குறித்து எதிர்த்தரப்பு செந்தில் என்ற கார்த்தியிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, குழந்தையை பராமரிக்க முடியவில்லை என கூறி, 8,000 ரூபாய் பணத்தை கருப்புசாமி பெற்று கொண்டதாகவும் குழந்தையை கொடுத்த போது 15 தினங்களில் குழந்தையை ஸ்வாதீனம் செய்து கொடுப்பதாகக் கூறி, பணத்தை பெற்றுக் கொண்டு சிலரின் தூண்டுதலின் பேரில் தற்போது தவறான தகவல்களை சொல்லி வருவதாக தெரிவித்தார்.