விவசாயத்தை அழிக்கும் விலங்குகள் : நஷ்டஈடு வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை : விவசாய நிலங்களில் காட்டு விலங்குகள் மூலம் ஏற்படும் பாதிப்புகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வலியுறுத்தி வாழை, மரவள்ளி செடிகளுடன் வந்திருந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை : விவசாய நிலங்களில் காட்டு விலங்குகள் மூலம் ஏற்படும் பாதிப்புகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வலியுறுத்தி வாழை, மரவள்ளி செடிகளுடன் வந்திருந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட குழுவினர் சி.பழனிசாமி தலைமையில் மாவட்ட ஆட்சியர் வந்திருந்த விவசாயிகள் வாழை, மரவள்ளி செடிகளுடன் வந்திருந்தனர். விவசாய நிலங்களில் காட்டு விலங்குகள் மூலம் ஏற்படும் பாதிப்புகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பின்னர் இதுகுறித்து அவர்கள் கூறுகையில், மேற்கு தொடர்ச்சி மலையோரம் அமைந்துள்ள சேத்துமடை, காளியாபுரம், செம்மணாபதி, தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, மத்தவராயபுரம், கரடிமடை, தாளியூர், சிறுமுகை மற்றும் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் வாழை, மக்காச்சோளம், மரவள்ளி, நிலக்கடலை என பயிரிடப்படுவதாகவும் மரநாய், காட்டுப் பன்றிகளால் இந்த பயிர்களால் அதிக அளவு பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்தனர்.



விளைந்து அறுவடைக்கு வரும் நேரங்களில் இவ்வாறு பாதிப்பு ஏற்படுவதால் விவசாயிகள் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாவதாகவும் அதிக அளவு பயிர்களை சேதம் செய்யும் காட்டு பன்றிகளை சுட்டுப் பிடிக்க வனத்துறை அமைச்சர் உத்தரவிட்டு இருந்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என குற்றம் சாட்டினர்.

மேலும், அண்டை மாநிலங்களில் வருவாய்த்துறை மற்றும் வனத்துறையினர் நடவடிக்கைகள் எடுத்து நிவாரணம் வழங்கப்படுவதைப் போல், இங்கும் நடைமுறை படுத்த முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். தொடர்ந்து, வன விலங்குகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நூறு சதவீத மானியத்துடன் சோலார் மின்வேலி அமைக்க அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...