கோவை : மேட்டுப்பாளையம் பகுதிகளில் பெய்யும் தொடர் மழை காரணமாக மூன்று வீடுகள் இடிந்து சேதமானது. இதில் அதிர்ஷ்டவசமாக இடியும் முன்னரே குடியிருந்தவர்கள் வெளியேறியதால் உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக, மேட்டுப்பாளையத்தின் மேற்கு பகுதியான காரமடை, வெள்ளியங்காடு, தாயனூர், புங்கம் பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் நீர் நிலைகள் நிரம்பி தண்ணீர் ஓடுகிறது.
இந்த நிலையில், வெள்ளியங்காடு ஊராட்சிக்குட்பட்ட மூத்துக்கல்லூர் பகுதியில் நள்ளிரவு, இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

இதனால் அந்த கிராமத்தில் ஊரின் நடுவே இருந்த மூன்று குடியிருப்புகள் இடிந்து விழுந்து சேதமானது. மகேஷ் குமார், கிருஷ்ணசாமி, மாதைய கவுடர் உள்ளிட்டவர்களின் மூன்று வீடுகள் ஈரம் காரணமாக அடுத்தடுத்து இடிந்து விழுந்து சேதமானது. வீட்டின் சுவர்கள் விரிசல் விடுவதை கண்ட குடியிருப்பவர்கள் சுதாரித்து முன்னரே வெளியேறியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.