திருப்பூரில் மேற்கூரை இல்லா குளியலறை பகுதியில் ஆளில்லா விமானம் மூலம் நில அளவீடு பணி : விவசாயிகள் புகார்

திருப்பூர் : நில அளவீடு மேற்கொள்வதாக மேற்கூரை இல்லா குளியலறை பகுதியில் படம் பிடிக்கும் பாரத் பெட்ரோலிய நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் மனு அளித்தனர்.

திருப்பூர் : நில அளவீடு மேற்கொள்வதாக மேற்கூரை இல்லா குளியலறை பகுதியில் படம் பிடிக்கும் பாரத் பெட்ரோலிய நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் மனு அளித்தனர்.

திருப்பூர் கண்டியன் கோவில் பகுதியில் பாரத் பெட்ரோலிய நிறுவனம் குழாய் பதிப்பதற்காக சட்டவிரோதமாக ஆளில்லா விமானம் மூலம் வீடியோ எடுத்து நில அளவீடு பணிகளை மேற்கொண்டது. இந்நிலையில், கண்டியன் கோவில் கிராமத்தில் சுமார் 1000 குடும்பங்கள் வசித்து வருவதாகவும். இங்கு, மேற்கூரை இல்லாத குளியலறை பெரும்பாலும் உள்ளதாக தெரிவித்தனர்.

மேலும், தோட்டத்தில் வேலை செய்யும் பெண்கள் ஆகிய நாங்கள் சேலை விலகிய நிலையில், விவசாய வேலைகளில் மூழ்கியிருப்போம். இப்பகுதியில் குழாய் பதிக்கும் பணிக்காக கடந்த 14ம் தேதி அன்று பாரத் பெட்ரோலிய நிறுவனம் சில நபர்களை வைத்து ஆளில்லா விமானம் மூலம் எங்கள் பகுதியை படம் பிடித்தது. அவ்வாறு படம்பிடிக்கப்பட்டது எங்கள் பகுதியில் மேற்கூரை இல்லாத குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த பெண்கள் மற்றும் சேலை விலகிய நிலையில் வேலை செய்து கொண்டிருந்த எங்கள் பகுதி பெண்களின் படங்களும் இடம் பெற்று இருக்க வாய்ப்புள்ளது.

எனவே, இது உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தனிப்பட்ட உரிமையை மீறிய செயல் எனவும் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் இந்த செயல், பெண்களின் மானத்தை கேள்விக்குறியாக்கி உள்ளதாகவும் , மாவட்ட நிர்வாகம் சட்டவிரோதமாக படம் பிடிக்க உத்தரவிட்ட அதிகாரி மற்றும் படம் பிடித்த நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட பெண்கள் உட்பட விவசாயிகள் ஏராளமானோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...