கோவை : கோவை வெள்ளலூரில் கனமழை காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை சுற்றி வெள்ள நீர் 3 நாட்களாக தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

வடகிழக்கு பருவமழை காரணமாக, கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள குளம் நிரம்பி வருகிறது. இதனிடையே குளத்தில் இருந்து வெளியேற்றப்படும் நீர், தேனீஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள சக்தி கார்டன், கிருஷ்ணா அவென்யூ உள்ளிட்ட பகுதிகளில் சூழ்ந்துள்ளது.

மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை சுற்றி வெள்ள நீர் சூழ்ந்து உள்ளதால், குடியிருப்புவாசிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடந்த 3 நாட்களாக குடியிருப்புகளை சுற்றி வெள்ள நீர் தேங்கியிருப்பதாகவும், இதனை வெளியேற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
நீர் வழித்தட ஆக்கிரமிப்புகள் காரணமாக குளத்தில் இருந்து வெளியேறும் நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவதாகவும், நீர் வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்றி, வெள்ள நீர் குடியிருப்புகளுக்குள் நுழைவதை தடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.