அரசியல் கட்சியில் சேர்ந்துவிட்டால் டாக்டர் பட்டம் பெற்றுவிடலாம் என இளைஞர்கள் நினைக்கின்றனர் - தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சர்ச்சை பேச்சு

கோவை : தமிழக முதல்வருக்கு நாளை கவுரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ள நிலையில், அரசியல் கட்சியில் சேர்ந்துவிட்டால் டாக்டர் பட்டம் பெற்றுவிடலாம் என இளைஞர்கள் நினைப்பதாக கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கோவை : தமிழக முதல்வருக்கு நாளை கவுரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ள நிலையில், அரசியல் கட்சியில் சேர்ந்துவிட்டால் டாக்டர் பட்டம் பெற்றுவிடலாம் என இளைஞர்கள் நினைப்பதாக கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.



கோவை சரவணம்பட்டியில் உள்ள பி.பி.ஜி. கல்லூரியின் நிறுவனர் தின விழாவில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். இதில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், நான் தமிழகத்திற்கு என்றும் நன்றி உள்ளவளாக இருப்பேன், என்னை மேதகு ஆளுநர் என்று அழைப்பதை விட பாசமிகு சசோதரி என்று அழைப்பதைத் தான் நான் அதிகம் விரும்புகிறேன் என்றார். 



அரசியல் கட்சியில் சேர்ந்துவிட்டால் தானாக டாக்டர் பட்டம் பெற்றுவிடலாம் என இன்றைய இளைய தலைமுறையினர் நினைப்பதாகவும், மேடையில் இருப்பவர்கள் கடின உழைப்பால் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் என்று கூறிய அவர், மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் எனவும், குடும்ப வழக்கை முக்கியத்துவத்தையும் அன்பின் பரிமாற்றத்தின் முக்கிய துவத்தையும் இன்றைய இளைய சமுதாயம் தெரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.



மேலும், எனது உயரத்தை, நிறத்தை, முடியை கிண்டல் செய்தார்கள், இன்று நான் மேடையில் இருந்து கொண்டு அவர்களை கிண்டல் செய்கிறேன். எனவே தடைகளை தாண்டி குறிக்கோள் நோக்கி மாணவர்கள் எப்போதும் பயணிக்க வேண்டும் என தெரிவித்தார். 

சீன பிரதமர் வருகையின் போது பிரதமர் மோடி, வேட்டி அணிந்து தமிழகத்தின் பெருமையை எடுத்துக்காட்டியது போல, தமிழ் மண்ணுக்கும் தெலுங்கானாவிற்கும் பாலமாக நான் இருப்பேன் என்று தெரிவித்த அவர், தமிழகத்தில் தன்னை அக்கா என்று அழைத்தது போல, தெலுங்கானாவிலும் தன்னை அக்கா என்று தான் அழைப்பதாக கூறினார்.



Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...