கோவை : தமிழக முதல்வருக்கு நாளை கவுரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ள நிலையில், அரசியல் கட்சியில் சேர்ந்துவிட்டால் டாக்டர் பட்டம் பெற்றுவிடலாம் என இளைஞர்கள் நினைப்பதாக கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கோவை சரவணம்பட்டியில் உள்ள பி.பி.ஜி. கல்லூரியின் நிறுவனர் தின விழாவில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். இதில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், நான் தமிழகத்திற்கு என்றும் நன்றி உள்ளவளாக இருப்பேன், என்னை மேதகு ஆளுநர் என்று அழைப்பதை விட பாசமிகு சசோதரி என்று அழைப்பதைத் தான் நான் அதிகம் விரும்புகிறேன் என்றார்.

அரசியல் கட்சியில் சேர்ந்துவிட்டால் தானாக டாக்டர் பட்டம் பெற்றுவிடலாம் என இன்றைய இளைய தலைமுறையினர் நினைப்பதாகவும், மேடையில் இருப்பவர்கள் கடின உழைப்பால் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் என்று கூறிய அவர், மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் எனவும், குடும்ப வழக்கை முக்கியத்துவத்தையும் அன்பின் பரிமாற்றத்தின் முக்கிய துவத்தையும் இன்றைய இளைய சமுதாயம் தெரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், எனது உயரத்தை, நிறத்தை, முடியை கிண்டல் செய்தார்கள், இன்று நான் மேடையில் இருந்து கொண்டு அவர்களை கிண்டல் செய்கிறேன். எனவே தடைகளை தாண்டி குறிக்கோள் நோக்கி மாணவர்கள் எப்போதும் பயணிக்க வேண்டும் என தெரிவித்தார்.
சீன பிரதமர் வருகையின் போது பிரதமர் மோடி, வேட்டி அணிந்து தமிழகத்தின் பெருமையை எடுத்துக்காட்டியது போல, தமிழ் மண்ணுக்கும் தெலுங்கானாவிற்கும் பாலமாக நான் இருப்பேன் என்று தெரிவித்த அவர், தமிழகத்தில் தன்னை அக்கா என்று அழைத்தது போல, தெலுங்கானாவிலும் தன்னை அக்கா என்று தான் அழைப்பதாக கூறினார்.