திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் நகையைப் பறித்து சென்ற இரண்டு மர்ம ஆசாமிகளை, சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பீமராயர் மெயின் வீதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். இவர் துணி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி ரமணி (64), நேற்று மதியம் 1 மணி அளவில், அவருடைய வீட்டிலிருந்து புறப்பட்டு, அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
சர்ச் ரோட்டிலிருந்து சின்னக்காளியம்மன் கோவிலுக்குச் செல்லும் ரோட்டில், விநாயகர் கோவில் அருகே அவர் சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் ரமணி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையைப் பறித்துக்கொண்டு வேகமாக தப்பிச் சென்று விட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரமணி, திருடன் திருடன் என்று சத்தம் போட்டதைக் கேட்டு, அருகே இருந்தவர்கள் மோட்டார் சைக்கிள்களில், மர்ம ஆசாமிகளை பிடிப்பதற்காக துரத்திச் சென்றனர். ஆனால் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் சென்ற மர்ம ஆசாமிகளை, பொது மக்களால் துரத்திப் பிடிக்க முடியவில்லை. பின்னர் இது பற்றி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து துணை காவல்துறை சூப்பிரண்டு ஜெயராமன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பிறகு அந்த பகுதியில் இருந்த வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் அடையாளம் தெரியாத 2 பேரில், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த ஆசாமி ஹெல்மெட் அணிந்திருப்பதும், பின்னால் அமர்ந்திருந்த ஆசாமி தலைக்கவசம் அணியாமல் இருந்ததும் தெரியவந்தது. மேலும் ரமணியிடம் நகையை பறித்துக் கொண்டு வேகமாகத் தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனையடுத்து, சிசிடிவி காட்சிகளைக் கொண்டு திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடைபெற்ற நகைப் பறிப்பு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.