முழு கொள்ளளவை எட்டிய பில்லூர் அணை ; வினாடிக்கு 30,000 கன அடி நீர் திறப்பு

கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி நான்கு மதகுகள் வழியே வினாடிக்கு 30,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பவானி ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி நான்கு மதகுகள் வழியே வினாடிக்கு 30,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பவானி ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழையானது அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்னரே கோவை, நீலகிரி மாவட்டத்தில் துவங்கி, கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த இரு நாட்களாக பில்லூர் அணை அமைந்துள்ள மேற்குத்தொடர்ச்சி மலை காடுகளில் கன மழைபெய்து வருகிறது. இதன் காரணமாக பில்லூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர் மட்டம் 98 அடியாக உயர்ந்தது.

அணையின் முழு கொள்ளளவான 100 அடியில் தற்போது 98அடி வரை தண்ணீர் நிரம்பியதால். அணைக்கு வரும் நீர் வரத்தான 30,000 கன அடி நீர் முழுவதும் பாதுகாப்பு கருதி, நான்கு மதகுகள் வழியே 30,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 



இதன் காரணமாக பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர மக்களுக்குப் பாதுகாப்பு கருதி வருவாய்த்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



கரையோர மக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ துணி துவைக்கவோ, மீன்பிடிக்கவோ கூடாது என காவல்துறை மூலம் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மேட்டுப்பாளையம் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை இனைந்து கரையோரம் உள்ள குடியிருப்புகளுக்குச் சென்று தண்டோராக்கள் மூலம் ஆற்றோரம் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தி வருகின்றனர்.

பில்லூர் அணை இந்தாண்டு ஐந்தாவது முறையாக நிரம்பியுள்ளதால் அதன் உபரி நீர், பவானி ஆற்றின் வழியே பவானி சாகர் அணையினை அடைவதால் அதன் நீர் மட்டம் தற்போது கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...