திருப்பூர் : திருப்பூரில் பள்ளி வளாகத்தை தற்காலிக பேருந்து நிலையமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்த சமூக ஆர்வலர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தீபாவளிக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், திருப்பூரில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்ல ஏராளமான சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன .திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் போதுமான இடவசதி இல்லாத காரணத்தால், தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க திருப்பூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு இடங்களை ஆலோசனை செய்து வருகின்றன.
இந்நிலையில், திருப்பூர் நஞ்சப்பா அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தையும் ஆய்வு செய்தனர். இதனையறிந்த முன்னாள் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்வோர் ஆகியோர் ஒன்றிணைந்து பள்ளி வளாகத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க கூடாது எனவும் அவ்வாறு அமைக்கும் பட்சத்தில் பள்ளி வளாகத்தில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, மாணவர்களும் பாதிக்கப்படுவதால் முடிவை மாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.