நீலகிரி : உதகையில் இருந்து நஞ்சநாடு, எடக்காடு, மஞ்சூர் செல்லும் பிரதான சாலையில் மஞ்சனக்கொரை எனும் பகுதியில் சேதமடைந்த சாலையை சரிசெய்து தரவேண்டுமென அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் வசிக்கும் பகுதியில், சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இவர்கள் செல்லும் பிரதான சாலையானது குண்டும் குழியுமாக காணப்படுகிறது. பல்வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் இச்சாலை இன்று வரை சரி செய்யப்படாமல் உள்ளதாக தெரிவித்தனர்.
நாள்தோறும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பணிக்கு செல்லும் கூலித் தொழிலாளர்கள் வாகனங்கள் செல்லும் போதும், கோடை சீசன் காலத்தில் வாகன நெரிசல் ஏற்படுவதாக கூறினார். இந்த சாலையை, பொதுமக்கள் பிரதான சாலையாக பயன்படுத்துவதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக குண்டும் குழியுமாக உள்ள இச்சாலையை சரி செய்து தர வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி ஆணையாளர் மற்றும் காவல்துறையினர், இரண்டு நாளில் சாலை அமைப்பதற்கான பணிகள் துவங்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். சாலை மறியலால் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பேச்சுவார்த்தைக்கு பின் வாகனங்கள் அனைத்தும் அனுமதிக்கப்பட்டன.