பண்டிகை கால வங்கிக் கடன் கொடுக்க மறுப்பதாக குறுந்தொழில் முனைவோர் சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு

கோவை : கோவையில் உள்ள குறுந்தொழில் முனைவோருக்கு வங்கிகளில் பண்டிகை கால வங்கிக் கடன் கொடுக்க மறுப்பதாகவும், கடன் கொடுக்க பல்வேறு நிபந்தனைகள் விதிப்பதாக குறுந்தொழில் முனைவோர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


கோவை : கோவையில் உள்ள குறுந்தொழில் முனைவோருக்கு வங்கிகளில் பண்டிகை கால வங்கிக் கடன் கொடுக்க மறுப்பதாகவும், கடன் கொடுக்க பல்வேறு நிபந்தனைகள் விதிப்பதாக குறுந்தொழில் முனைவோர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு குறுந்தொழில் முனைவோர் சங்கத்தினை சேர்ந்த குறுந்தொழில் முனைவோர் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று அதிகாரிகளிடம் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த குறுந்தொழில் முனைவோர், கடுமையான தொழில் நெருக்கடியில் கோவை தொழில் முனைவோர் சிக்கியிருக்கும் நிலையில், மத்திய அரசு பண்டிகை கால கடன் வழங்க வங்கி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தி இருந்தும் கோவையில் உள்ள வங்கி நிர்வாகங்கள் கடன் வழங்க மறுப்பதாக புகார் தெரிவித்தனர்.



மேலும், பண்டிகை கால வங்கிக் கடன் கொடுக்க வங்கி நிர்வாகங்கள் பல்வேறு நிபந்தனைகள் விதிப்பதாக குற்றம் சாட்டிய குறுந்தொழில் முனைவோர் சங்கத்தினர், கடுமையான தொழில் நெருக்கடியில் சிக்கியிருக்கும் நிலையில், பண்டிகை கால வங்கிக் கடன் கிடைக்கவில்லை எனில் தொழிலாளர்களுக்கு போனஸ் கொடுப்பதில் சிக்கல் ஏற்படும் என்றனர். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில், பண்டிகை கால கடன் கிடைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...