பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலைகளால் பொதுமக்கள் அவதி ; உடனடியாக சாலை அமைக்க கோரிக்கை

கோவை : கோவை மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை அமைக்க சாலைகள் தோண்டப்பட்டு பணிகள் நிறைவடைந்த நிலையில், முழுமையாக மூடப்படாததால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.


கோவை : கோவை மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை அமைக்க சாலைகள் தோண்டப்பட்டு பணிகள் நிறைவடைந்த நிலையில், முழுமையாக மூடப்படாததால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.



கோவை இராமநாதபுரம் பகுதியில் பாரதி நகர், காமாட்சியம்மன் கோவில், இந்திரா நகர், ஸ்ரீபதி நகர், ரூபா நகர், வின்சென்ட் சாலை என எல்லா இடங்களிலும் குழிகள் தோண்டப்பட்டு உள்ளதால் அப்பகுதியில் வசிப்பவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

குறிப்பாக, தாங்கள் வசிக்கும் பகுதியில் இருந்து பிரதான சாலைக்கு வருவதற்குள் பெரும் அவஸ்தைக்கு உள்ளாகின்றனர். தற்போது, அடிக்கடி மழை பெய்து வருவதால் பெரும்பாலான பகுதிகள் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது.



அதிகப்படியான மக்கள் வசித்து வரும் நிலையில், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்வோர் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்த பாதாள சாக்கடை திட்டம் முடிவு பெற்றும் சாலை அமைக்காத காரணத்தால், அடிக்கடி வாகனத்தில் இருந்து தவறி விழுவது வாடிக்கை ஆகிவிட்டது. இதனால் மாநகராட்சி உடனடியாக சாலை அமைத்திட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...