திருப்பூரில் உயர்மின் கோபுரத்திற்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெறக் கோரி மனு

திருப்பூர் : திருப்பூரில் உயர் மின்னழுத்த கோபுரத்திற்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்

திருப்பூர் : திருப்பூரில் உயர் மின்னழுத்த கோபுரத்திற்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்

திருப்பூர் குண்டடம் தாராபுரம் பகுதியில் விவசாய நிலங்கள் வழியே உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைக்கப்படுவதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது தாராபுரம் வட்டாட்சியர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடந்த ஒரு மாத காலமாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.



கடந்த வாரம் ஜாமீனில் வெளிவந்த விவசாயிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான விவசாயிகள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.



அப்போது, விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கைத் திரும்பப் பெறக் கோரியும், வழக்கு தொடுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...