திருப்பூர் : திருப்பூரில் பொதுமக்கள் இனி தங்கள் புகார்களை வாட்ஸ்அப் மூலம் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கும் புதிய திட்டத்தை மாவட்ட ஆட்சியர் கே. விஜயகார்த்திகேயன் துவங்கி வைத்தார்.

திருப்பூர் மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள அடிப்படை பிரச்சினைகள் மற்றும் குறைகளை மாவட்ட நிர்வாகத்திற்கு 9700041114 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு தெரியப்படுத்தலாம் என மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் தங்கள் புகார் குறித்த விவரத்தை எந்தநேரமும் அனுப்பலாம் எனவும் அவை உடனடியாக கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.
திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பயண செலவை மேற்கொண்டு வந்து புகார் அளிப்பதற்கு பதிலாக இதுபோன்ற எளிய முறையில் புகார் அளிக்க அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.