கோவை : மேட்டுப்பாளையம் நகராட்சி மற்றும் லயன்ஸ் கிளப் இணைந்து பள்ளி மாணவ மாணவிகளிடையே டெங்கு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதகாலமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலைகள், சாக்கடைகள், பயன்படுத்தாத பிளாஸ்டிக் பொருட்கள் என ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கிடக்கின்றன. இதனால் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஏடிஎஸ் வகை கொசுக்கள் உற்பத்தியாவதை கட்டுப்படுத்தும் வகையில் மேட்டுப்பாளையம் லயன்ஸ் கிளப் நகராட்சியுடன் இனைந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, பள்ளி மாணவ மாணவிகளிடையே டெங்கு காய்ச்சலை தடுப்பது குறித்தும் அதனைத் தடுக்க சுற்றுப்புறத்தை எவ்வாறு பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து மேட்டுப்பாளையம் அரசு மகாஜன பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், கோமாளி வேடமணிந்த நகராட்சி ஊழியர் ஜெயனாமன், ஆடிப்பாடி குழந்தைகளுக்கு எளிதில் புரியும் வகையில் மனதில் பதியும் நோக்கில் டெங்கு கொசு உருவாவதை தடுப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
மேலும், அரசு மருத்துவமனை சித்தா பிரிவு மருத்துவர்களைக் கொண்டு திடீர் காய்ச்சல் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் நிலவேம்பு கசாயம், பப்பாளி சாறு ஆகியவையின் மருத்துவ குணம் குறித்து விளக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.