நெகிழி இல்லா திருப்பூர் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

திருப்பூர் : நெகிழி இல்லா திருப்பூர் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டியினை மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

திருப்பூர் : நெகிழி இல்லா திருப்பூர் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டியினை மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நெகிழியில்லா திருப்பூர் மற்றும் நீர் மேலாண்மை பாதுகாப்பு உள்ளிட்டவை வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புஸ்பா ரவுண்டானா வரை சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.



13 வயதிற்கு குறைவான சிறுவர்களுக்கு மூன்று கிலோ மீட்டர் தூரம் போட்டி நடைபெற்றது. இந்த மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் மாரத்தான் போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு தொகை மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

பரிசுகளை வழங்கிய பின் பேசிய மாவட்ட ஆட்சியர், பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்ப்பது மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் மேலாண்மை பாதுகாப்பது உள்ளிட்ட செயல்பாடுகளை சிறுவர்கள் செய்யும் போது, பிற்காலத்தில் அவர்கள் தலைவர்களாக உருவாகலாம் என பேசினார். நெகிழி இல்லா திருப்பூர் என்பதில் திருப்பூர் மாவட்டம் முதல் இடத்தில் இருப்பது போல, அனைவரும் தங்கள் வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பதன் மூலமும் திருப்பூர் முதன்மை மாவட்டமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...