தூய்மைப் பணியாளர்களின் காலில் விழுந்து அவர்களை பெருமைப்படுத்திய, அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் மாணவர் பிரிவினர்

கோவை : கோவையில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையும் தான் கொண்ட பணிக்காக பணி தொடர்பவர்களுக்கு மாணவர்கள் இனிப்புகள் மற்றும் பாராட்டுக் கடிதங்கள் வழங்கி ஊக்கப்படுத்தினர்.


கோவை : கோவையில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையும் தான் கொண்ட பணிக்காக பணி தொடர்பவர்களுக்கு மாணவர்கள் இனிப்புகள் மற்றும் பாராட்டுக் கடிதங்கள் வழங்கி ஊக்கப்படுத்தினர்.



கோவையில் தன்னலம் பாராமல் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை நாட்களிலும் தனது பணியை சிறப்பாக செய்யும் பல்வேறு துறை சார்ந்தவர்களை கௌரவிக்கும் வகையில் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் மாணவர் பிரிவினர் இனிப்புகளை வழங்கி பாராட்டு கடிதங்களை கொடுத்தனர்.



வாரத்தில் 6 நாட்கள் கடுமையாக உழைக்கும் மனிதன் ஏழாவது நாளான ஞாயிற்று கிழமையை தனது குடும்பத்துடன் செலவழிப்பதையே அதிகம் விரும்புவர். ஆனால், அந்த விடுமுறை நாளை தான் கொண்ட பணிக்காக விட்டுக்கொடுத்து வழக்கம்போல பணி தொடர்வது பாராட்டுக்கு உரியதே.

இப்படி, பணிசெய்யும் பல்வேறு துறைசார்ந்தவர்களை பாராட்டுவதன் மூலம் அவர்களின் மன அழுத்தங்களை அகற்ற முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், இன்று கோவையில் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் மாணவர் பிரிவினர் 

தீயணைப்பு துறையினர், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், காவல்துறையினர், கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் என பல துறை சார்ந்தவர்களை சந்தித்து அவர்களுக்கு வாழ்த்து அட்டையும் இனிப்பு வழங்கி ஊக்கப்படுத்தினர்.

இதில், குறிப்பாக அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியில் ஈடுபடும் பணியாளர்களை கௌரவப்படுத்தி அவர்களின் உயரிய தூய்மைப் பணியை பெருமைப்படுத்தினர்.



இதன் தொடர்ச்சியாக மாணவர்கள் தூய்மைப் பணியின் உன்னதத்தை உணர்த்தும் வகையில் தூய்மைப் பணியாளர்களின் காலில் விழுந்து அவர்களின் பணியை பெருமைப்படுத்தியது அனைவர் மத்தியிலும் பாராட்டுக்களைப் பெற்றது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...