கோவை : கோவையில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையும் தான் கொண்ட பணிக்காக பணி தொடர்பவர்களுக்கு மாணவர்கள் இனிப்புகள் மற்றும் பாராட்டுக் கடிதங்கள் வழங்கி ஊக்கப்படுத்தினர்.
கோவை : கோவையில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையும் தான் கொண்ட பணிக்காக பணி தொடர்பவர்களுக்கு மாணவர்கள் இனிப்புகள் மற்றும் பாராட்டுக் கடிதங்கள் வழங்கி ஊக்கப்படுத்தினர்.

கோவையில் தன்னலம் பாராமல் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை நாட்களிலும் தனது பணியை சிறப்பாக செய்யும் பல்வேறு துறை சார்ந்தவர்களை கௌரவிக்கும் வகையில் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் மாணவர் பிரிவினர் இனிப்புகளை வழங்கி பாராட்டு கடிதங்களை கொடுத்தனர்.

வாரத்தில் 6 நாட்கள் கடுமையாக உழைக்கும் மனிதன் ஏழாவது நாளான ஞாயிற்று கிழமையை தனது குடும்பத்துடன் செலவழிப்பதையே அதிகம் விரும்புவர். ஆனால், அந்த விடுமுறை நாளை தான் கொண்ட பணிக்காக விட்டுக்கொடுத்து வழக்கம்போல பணி தொடர்வது பாராட்டுக்கு உரியதே.
இப்படி, பணிசெய்யும் பல்வேறு துறைசார்ந்தவர்களை பாராட்டுவதன் மூலம் அவர்களின் மன அழுத்தங்களை அகற்ற முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், இன்று கோவையில் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் மாணவர் பிரிவினர்
தீயணைப்பு துறையினர், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், காவல்துறையினர், கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் என பல துறை சார்ந்தவர்களை சந்தித்து அவர்களுக்கு வாழ்த்து அட்டையும் இனிப்பு வழங்கி ஊக்கப்படுத்தினர்.
இதில், குறிப்பாக அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியில் ஈடுபடும் பணியாளர்களை கௌரவப்படுத்தி அவர்களின் உயரிய தூய்மைப் பணியை பெருமைப்படுத்தினர்.

இதன் தொடர்ச்சியாக மாணவர்கள் தூய்மைப் பணியின் உன்னதத்தை உணர்த்தும் வகையில் தூய்மைப் பணியாளர்களின் காலில் விழுந்து அவர்களின் பணியை பெருமைப்படுத்தியது அனைவர் மத்தியிலும் பாராட்டுக்களைப் பெற்றது.