கோவை : கோவை செல்வபுரம் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்த தனி வட்டாட்சியர் ஆலைக்கு சீல் வைத்தார்.

செல்வபுரம் பகுதியில் ரேசன் அரிசியை பதுக்கி அரவை செய்து விற்கப்படுவதாக மாவட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், தனி வட்டாட்சியர் சிவக்குமார் தலைமையில் பறக்கும் படையினர் செல்வபுரத்தில் இயங்கி வந்த அந்த ஆலையில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள், ஒரு இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும், விசாரணையில் நீண்ட நாட்களாக இந்த ஆலையில் ரேசன் அரிசி பதுக்கப்பட்டு அரவை செய்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மற்றும் வாகனம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குடோனில் வைக்கப்பட்டது.