கோவையில் ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்த ஆலைக்கு சீல் ; 500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

கோவை : கோவை செல்வபுரம் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்த தனி வட்டாட்சியர் ஆலைக்கு சீல் வைத்தார்.

கோவை : கோவை செல்வபுரம் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்த தனி வட்டாட்சியர் ஆலைக்கு சீல் வைத்தார்.

செல்வபுரம் பகுதியில் ரேசன் அரிசியை பதுக்கி அரவை செய்து விற்கப்படுவதாக மாவட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், தனி வட்டாட்சியர் சிவக்குமார் தலைமையில் பறக்கும் படையினர் செல்வபுரத்தில் இயங்கி வந்த அந்த ஆலையில் ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது, ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள், ஒரு இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலு‌ம், விசாரணையில் நீண்ட நாட்களாக இந்த ஆலையில் ரேசன் அரிசி பதுக்கப்பட்டு அரவை செய்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மற்றும் வாகனம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குடோனில் வைக்கப்பட்டது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...