கோவை மாநகராட்சி வளர்ச்சி‌ பணிகள்‌ குறித்து அலுவலர்கள்‌, பொறியாளர்களுடன்‌ மாநகராட்சி ஆணையர் ஆய்வுக்‌ கூட்டம்‌

கோவை : கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ மாநகராட்சியில்‌ நடைபெற்று வரும்‌ வளர்ச்சி‌ பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ அவர்களின்‌ தலைமையில்‌ அலுவலர்கள்‌, பொறியாளாகளுடன்‌ ஆய்வுக்‌ கூட்டம்‌ நடைபெற்றது.

கோவை : கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ மாநகராட்சியில்‌ நடைபெற்று வரும்‌ வளர்ச்சி‌ பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ அவர்களின்‌ தலைமையில்‌ அலுவலர்கள்‌, பொறியாளாகளுடன்‌ ஆய்வுக்‌ கூட்டம்‌ நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு மாநகராட்சி துணை ஆணையாளர்‌ ச.பிரசன்னா ராமசாமி அவர்கள்‌ முன்னிலை வகித்தார். மாநகராட்சியின்‌ 100 வார்டுகளிலும்‌ நடைபெற்று வருகின்ற வளர்ச்சிப்‌ பணிகளின்‌ முன்னேற்றம்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌ கலந்தாய்வு மேற்கொண்டார்.

சாலைப்பணிகள்‌, பாதாள சாக்கடை திட்டப்பணிகள்‌, குடிநீர்‌ வசதியினை சீராக்கிடவும்‌ மேம்படுத்தவும்‌ மேற்கொள்ளப்பட்டுவரும்‌ பணிகள்‌, மின்விளக்கு வசதிகள்‌, நுண்ணுயிர்‌ உரம்‌ தயாரிக்கும்‌ மையங்களின்‌ செயல்பாடுகள்‌ (Micro Composing Centre) மற்றும்‌ ஆழ்குழாய்‌ கிணறுகளின்‌ செயல்பாடுகள்‌ ஆகிய பணிகள்‌ குறித்தும்‌ வளர்ச்சிப்‌ பணிகள்‌ குறித்தும்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷரவன்குமார்‌ ஜடாவத்‌ அவர்கள்‌ ஆய்வு மேற்கொண்டு, பணிகளை துரிதமாகவும்‌, தரமாகவும்‌ விரைந்து முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்கள்‌, பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில்‌ மாநகரப்‌ பொறியாளர்‌ ஆ.லட்சுமணன்‌, உதவி ஆணையாளர்கள்‌ டி.ஆர்‌.ரவி, செந்தில்குமார்ரத்தினம்‌, மகேஷ்கனகராஜ்‌, ஏ.ஜெ.செந்தில்‌ அரசன்‌, ம.செல்வன்‌, மேற்கு மண்டல செயற்பொறியாளர்‌ (திட்டம்‌) ரவிச்சந்திரன்‌, செயற்பொறியாள்கள்‌ சரவணக்குமார்‌, பார்வதி மற்றும்‌ அலுவலர்கள்‌, பொறியாளர்கள்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...