கோவை : சீன அதிபரின் உருவப்படம் கைத்தறி தொழில்நுட்பத்தில் தத்ரூபமாக அமைக்கப்பட்டு, சீன அதிபர் ஷின் ஜின்பிங்கிற்கு பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட சிறுமுகை கைத்தறி சால்வையை பிரதமர் நரேந்திர மோடி நாளை பரிசளிக்க உள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள சிறுமுகை கைத்தறி பட்டு சமீபகாலமாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அரசின் கவனத்தையும் பெற்று வருகிறது. குறிப்பாக கைத்தறி துறையில் பல்வேறு உயரிய தொழில் நுட்பங்களை கையாளும் திறன்கொண்ட சிறுமுகை நெசவாளர்கள் தற்போது புதிய தொழில்நுட்பமாக கைத்தறி பட்டு தயாரிக்கும் சேலை மற்றும் சால்வைகளில் உருவப்படம் தயாரித்து அசத்தி வருகின்றனர்.
அந்த வகையில் அதற்கு மகுடம் சேர்த்தாப்போல் ஒரு நிகழ்வு நாளை நடைபெற உள்ளது. நாளை உலக நாடுகள் அனைத்தும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு நிகழ்வாக பாரத பிரதமர் மற்றும் சீன அதிபர் சந்திப்பு நடைபெற உள்ள நிலையில் ஸ்ரீ ராமலிங்க செளடாம்பிகை கூட்டுறவு நெசவாளர் சங்கத்தின் மூலம் சீன அதிபர் உருவத்தை முழுக்க முழுக்க கைத்தறியில் இரண்டுநாட்களில் இடைவிடாது தயாரித்து அனுப்பி அசத்தியுள்ளனர் சிறுமுகை நெசவாளர்கள்.
இது இந்தியாவில் கைத்தறி திறனைக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஒரு வாய்ப்பாக இருக்கும் என சிறுமுகை கைத்தறி நெசவாளர்கள் பெருமையடைந்துள்ளனர்.