சீன அதிபருக்கு சிறுமுகையில் தயாரிக்கப்பட்ட சால்வை பாரத பிரதமர் நாளை பரிசளிக்க உள்ளார்

கோவை : சீன அதிபரின் உருவப்படம் கைத்தறி தொழில்நுட்பத்தில் தத்ரூபமாக அமைக்கப்பட்டு, சீன அதிபர் ஷின் ஜின்பிங்கிற்கு பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட சிறுமுகை கைத்தறி சால்வையை பிரதமர் நரேந்திர மோடி நாளை பரிசளிக்க உள்ளார்.

கோவை : சீன அதிபரின் உருவப்படம் கைத்தறி தொழில்நுட்பத்தில் தத்ரூபமாக அமைக்கப்பட்டு, சீன அதிபர் ஷின் ஜின்பிங்கிற்கு பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட சிறுமுகை கைத்தறி சால்வையை பிரதமர் நரேந்திர மோடி நாளை பரிசளிக்க உள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள சிறுமுகை கைத்தறி பட்டு சமீபகாலமாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அரசின் கவனத்தையும் பெற்று வருகிறது. குறிப்பாக கைத்தறி துறையில் பல்வேறு உயரிய தொழில் நுட்பங்களை கையாளும் திறன்கொண்ட சிறுமுகை நெசவாளர்கள் தற்போது புதிய தொழில்நுட்பமாக கைத்தறி பட்டு தயாரிக்கும் சேலை மற்றும் சால்வைகளில் உருவப்படம் தயாரித்து அசத்தி வருகின்றனர்.

அந்த வகையில் அதற்கு மகுடம் சேர்த்தாப்போல் ஒரு நிகழ்வு நாளை நடைபெற உள்ளது. நாளை உலக நாடுகள் அனைத்தும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு நிகழ்வாக பாரத பிரதமர் மற்றும் சீன அதிபர் சந்திப்பு நடைபெற உள்ள நிலையில் ஸ்ரீ ராமலிங்க செளடாம்பிகை கூட்டுறவு நெசவாளர் சங்கத்தின் மூலம் சீன அதிபர் உருவத்தை முழுக்க முழுக்க கைத்தறியில் இரண்டுநாட்களில் இடைவிடாது தயாரித்து அனுப்பி அசத்தியுள்ளனர் சிறுமுகை நெசவாளர்கள்.

இது இந்தியாவில் கைத்தறி திறனைக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஒரு வாய்ப்பாக இருக்கும் என சிறுமுகை கைத்தறி நெசவாளர்கள் பெருமையடைந்துள்ளனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...