ஜீவா நகர் மக்களுக்கு காப்பிக்கடை பகுதியில் வீடுகள் ஒதுக்கீடு ; 97 வீடுகளுக்கான டோக்கன்கள் வழங்கப்பட்டது

கோவை : கோவை ஜீவா நகர் பகுதியில் குடியிருந்து வந்த 97 குடியிருப்புவாசிகளுக்கு சரவணம்பட்டி பகுதியில் உள்ள காப்பிக்கடை குடிசை மாற்று வாரிய பகுதியில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதற்கான டோக்கன்கள் இன்று வழங்கப்பட்டது.

கோவை : கோவை ஜீவா நகர் பகுதியில் குடியிருந்து வந்த 97 குடியிருப்புவாசிகளுக்கு சரவணம்பட்டி பகுதியில் உள்ள காப்பிக்கடை குடிசை மாற்று வாரிய பகுதியில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதற்கான டோக்கன்கள் இன்று வழங்கப்பட்டது.

கோவை மேட்டுப்பாளையம் சாலை ஜீவா நகர் பகுதியில் குடியிருந்து வந்த ஆக்கிரமிப்பாளர்களின் 247 வீடுகளை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் காலி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் ஏற்கனவே 150க்கும் மேற்பட்டோர் வீடுகளை காலி செய்து விட்ட நிலையில் அங்கு குடியிருந்து வந்த 100 குடும்பத்தினர் தங்களுக்கு நகருக்கு அருகிலேயே வீடுகளை ஒதுக்கி தர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். குறிப்பாக சரவணம்பட்டி அருகே உள்ள காப்பி கடை பகுதியில் கட்டப்பட்டு

வரும் குடிசை மாற்று வாரிய வீடுகளில் தங்களுக்கு இருப்பிடம் வழங்க வேண்டும் என அவர்கள் மனு அளித்திருந்தனர்.

கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உள்ளிட்டவர்களின் ஆலோசனையின் பேரில் இது தொடர்பாக அளிக்கப்பட்ட மனுக்களை பெற்றுக்கொண்ட மாநகராட்சி ஆணையாளர் ஷிரவண் குமார் ஜடாவத், அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி இவர்களுக்கு காப்பி கடை பகுதியில் வீடுகளை ஒதுக்க ஆணையிட்டார். இதையடுத்து 97 வீடுகளுக்கான ஒதுக்கீடு டோக்கன்களை பயனாளர்களுக்கு வழங்கப்பட்டது.

இதை தொடர்ந்து ஜீவா நகர் பகுதியில் ஆக்கிரமிப்பாளர்களின் வீடுகள் மற்றும் கட்டிடங்களை இடித்து அகற்றும் பணிகள் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரத்தில் ஆக்கிரமிப்பு வீடுகளை காலி செய்து கொண்டிருந்த போது 2 இளைஞர்கள் ஜீவா நகர் பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...