கோவை : கோவை ஜீவா நகர் பகுதியில் குடியிருந்து வந்த 97 குடியிருப்புவாசிகளுக்கு சரவணம்பட்டி பகுதியில் உள்ள காப்பிக்கடை குடிசை மாற்று வாரிய பகுதியில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதற்கான டோக்கன்கள் இன்று வழங்கப்பட்டது.

கோவை மேட்டுப்பாளையம் சாலை ஜீவா நகர் பகுதியில் குடியிருந்து வந்த ஆக்கிரமிப்பாளர்களின் 247 வீடுகளை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் காலி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் ஏற்கனவே 150க்கும் மேற்பட்டோர் வீடுகளை காலி செய்து விட்ட நிலையில் அங்கு குடியிருந்து வந்த 100 குடும்பத்தினர் தங்களுக்கு நகருக்கு அருகிலேயே வீடுகளை ஒதுக்கி தர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். குறிப்பாக சரவணம்பட்டி அருகே உள்ள காப்பி கடை பகுதியில் கட்டப்பட்டு
வரும் குடிசை மாற்று வாரிய வீடுகளில் தங்களுக்கு இருப்பிடம் வழங்க வேண்டும் என அவர்கள் மனு அளித்திருந்தனர்.
கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உள்ளிட்டவர்களின் ஆலோசனையின் பேரில் இது தொடர்பாக அளிக்கப்பட்ட மனுக்களை பெற்றுக்கொண்ட மாநகராட்சி ஆணையாளர் ஷிரவண் குமார் ஜடாவத், அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி இவர்களுக்கு காப்பி கடை பகுதியில் வீடுகளை ஒதுக்க ஆணையிட்டார். இதையடுத்து 97 வீடுகளுக்கான ஒதுக்கீடு டோக்கன்களை பயனாளர்களுக்கு வழங்கப்பட்டது.
இதை தொடர்ந்து ஜீவா நகர் பகுதியில் ஆக்கிரமிப்பாளர்களின் வீடுகள் மற்றும் கட்டிடங்களை இடித்து அகற்றும் பணிகள் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரத்தில் ஆக்கிரமிப்பு வீடுகளை காலி செய்து கொண்டிருந்த போது 2 இளைஞர்கள் ஜீவா நகர் பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.