அரசு ஊழியர் சங்க தலைவர்களை பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை : அரசு ஊழியர் சங்க தலைவர்களை பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து கோவையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை : அரசு ஊழியர் சங்க தலைவர்களை பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து கோவையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத்தலைவர் சுப்பிரமணியன் பணி ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம், மாநில துணைத்தலைவர் கரூர் சுப்பிரமணியம் தற்காலிக பணிநீக்கம், கோவை மாவட்டத்தில் டிஎன்ஜிஏ மாவட்ட தலைவர் செந்தில் குமார், மாவட்ட துணைத தலைவர் முத்துராஜ், வட்ட நிர்வாகிகள் ஸ்ரீனிவாசன், ராமமூர்த்தி உள்ளிட்டவர்களை ஜேக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக மாவட்ட இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

அரசு பழிவாங்கும் நடவடிக்கை கைவிட வேண்டும், மாநில துணைத்தலைவரின் தற்காலிக பணிநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும், மாவட்ட இடமாறுதல் செய்யப்பட்ட கோவை மாவட்ட நிர்வாகிகளை மீண்டும் கோவை மாவட்டத்திலேயே பணியமர்த்த கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் சதிஷ்குமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையீடு செய்தனர். இதில் ஏராளமான ஊழியர்கள் பங்கேற்று அரசின் நடவடிக்கைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...