கோவை மாவட்டம் தடாகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் காற்று மற்றும் ஒலி மாசு குறித்து ஆய்வு

கோவை : கோவை மாவட்டம் தடாகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செங்கல் சூளைகள் அதிகளவு செம்மண் எடுப்பது தொடர்பாக புகார் எழுந்த நிலையில் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இன்று அப்பகுதிகளில் காற்று மற்றும் ஒலி மாசு குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.


கோவை : கோவை மாவட்டம் தடாகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செங்கல் சூளைகள் அதிகளவு செம்மண் எடுப்பது தொடர்பாக புகார் எழுந்த நிலையில் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இன்று அப்பகுதிகளில் காற்று மற்றும் ஒலி மாசு குறித்து ஆய்வு மேற்கொண்டனர். 

கோவை மாவட்டம் தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக செம்மண் எடுப்பதாக தொடர் குற்றச்சாட்டுகள் வைக்கும் அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்திருந்தனர். 

இந்நிலையில் மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் இன்று தடாகத்தை அடுத்த வீரபாண்டி கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனர். சென்னை மற்றும் கோவையில் இருந்து வந்த மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் காற்றினை கண்டறியும் கருவிகளையும், ஒலி மாசு கண்டறியும் கருவிகளையும் கொண்டு ஆய்வு நடத்தி வருகின்றனர்.



மொத்தம் 9 இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு இந்தக் கருவிகள் வீரபாண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த இயந்திரங்கள் மூலம் தொடர்ச்சியாக 8 மணி நேரம் காற்று மற்றும் சுற்றுசூழல் மாசடைவது குறித்து கண்காணிப்படும். கோவை மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் ரமேஷ் , உதவி இயக்குனர் செல்வராஜ் ஆகியோர் வீரபாண்டி பகுதியில் முகாமிட்டு காற்று மாசு குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த ஆய்வு பணியானது இந்த பகுதியில் தொடர்ந்து சில தினங்கள் நடத்தப்படும் என மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...