கோவை : கோவை மாவட்டம் தடாகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செங்கல் சூளைகள் அதிகளவு செம்மண் எடுப்பது தொடர்பாக புகார் எழுந்த நிலையில் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இன்று அப்பகுதிகளில் காற்று மற்றும் ஒலி மாசு குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

கோவை மாவட்டம் தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக செம்மண் எடுப்பதாக தொடர் குற்றச்சாட்டுகள் வைக்கும் அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் இன்று தடாகத்தை அடுத்த வீரபாண்டி கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனர். சென்னை மற்றும் கோவையில் இருந்து வந்த மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் காற்றினை கண்டறியும் கருவிகளையும், ஒலி மாசு கண்டறியும் கருவிகளையும் கொண்டு ஆய்வு நடத்தி வருகின்றனர்.

மொத்தம் 9 இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு இந்தக் கருவிகள் வீரபாண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த இயந்திரங்கள் மூலம் தொடர்ச்சியாக 8 மணி நேரம் காற்று மற்றும் சுற்றுசூழல் மாசடைவது குறித்து கண்காணிப்படும். கோவை மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் ரமேஷ் , உதவி இயக்குனர் செல்வராஜ் ஆகியோர் வீரபாண்டி பகுதியில் முகாமிட்டு காற்று மாசு குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஆய்வு பணியானது இந்த பகுதியில் தொடர்ந்து சில தினங்கள் நடத்தப்படும் என மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.