கோவை : கோவை மத்திய சிறை நுழைவாயில் அருகே சிறை நிர்வாகத்தினரால் புதியதாக மற்றுமொரு சிறை பஜார் இன்று திறக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சிறைத் துறை மூலம் கைதிகளின் நல்வாழ்வுக்கு ஏராளமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவை மத்திய சிறை வளாகம் முன்பு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் உதவியுடன் நன்னடத்தை கைதிகளை கொண்டு பெட்ரோல் பங்க் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அதன் அருகிலேயே முடிதிருத்தும் கடைகள், ஆவின் பாலகங்கள் என அடுத்தடுத்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த வளாகங்களில் கோவை மத்திய சிறையில் தண்டனை பெற்று வரும் கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் சுழற்சிமுறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று கோவை மத்திய சிறையில் உள்ள தண்டனை கைதிகளை பார்வையிட வரும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கைதிகளுக்கு தேவையான பெட்ஷீட், துண்டு போர்வைகள், இனிப்பு வகைகள், கார வகைகள் உட்பட பல்வேறு பொருட்களை சிறைக்கைதிகளுக்கு வாங்கிச் செல்வதற்காக புதியதாக ஒரு சிறு பஜார் போன்ற அங்காடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பஜாரில் நடைபெறும் விற்பனையை நன்னடத்தை கைதிகள் நடத்துவர். இந்த அங்காடியை கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் இன்று துவக்கி வைத்தார்.
மேலும் சிறையில் தண்டனை பெற்று வரும் கைதிகள் தங்களது எதிர்காலத்தை சரியான முறையில் நடத்த இது போன்ற தொழில் முறைகள் உதவியாக இருக்கும் என சிறை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.