கோவையில் கெட்டுப்போன சமோசா விற்பனை செய்த விவகாரம்; நியாயம் கேட்க சென்றவர்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்

கோவை : கெட்டுப்போன சமோசா குறித்து கடை உரிமையாளரிடம் கேள்வி எழுப்பிய நபர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் உரிய விசாரணை செய்யக் கோரி புகார் அளித்துள்ளனர்.


கோவை : கெட்டுப்போன சமோசா குறித்து கடை உரிமையாளரிடம் கேள்வி எழுப்பிய நபர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் உரிய விசாரணை செய்யக் கோரி புகார் அளித்துள்ளனர்.



கோவை தடாகம் அருகே உள்ள ஆனைக்கட்டி அஞ்சல் ஆலமரமேடு பகுதியில் வசித்து வருபவர் செல்வத்தின் மனைவி ஜெயந்தி (46). இவர் அங்குள்ள தனியார் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். 

இவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று காலை 11 மணி அளவில் தடாகம் பகுதியில் உள்ள நூர் முகம்மது என்பவருக்கு சொந்தமான கடையில் சமோசா வாங்கியுள்ளார். இதையடுத்து சமோசாவை ஜெயந்தியும் அவரது நிறுவனத்தில் பணி புரிபவர்களும் சாப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் சமோசா கெட்டுப் போயுள்ளதால் அதை உண்டவர்கள் தொடர்ந்து வாந்தி எடுத்து வந்துள்ளனர். அதேபோல இதில் தனபாக்கியம் என்பவருக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டுள்ளது.

பின்னர் சமோசா குறித்து கடை உரிமையாளர்களிடம் ஜெயந்தி தரப்பினர் கேள்வி எழுப்பிய போது தெரியாமல் நடந்து விட்டதாக கூறி மன்னிப்பு கேட்டுள்ளனர். இதனையடுத்து உள்ளூருக்குள் பிரச்சனை வேண்டாம் என கருதிய ஜெயந்தி தரப்பினர் எந்த புகாரும் அளிக்கவில்லை.



இப்படியிருக்க கெட்டுப்போன சமோசா விற்பனை தொடர்பாக புகார் அளிக்காமல் இருக்க ஜெயந்தி மற்றும் தனபாக்கியம் இருவரும் மூன்றாயிரம் ரூபாய் வாங்கி விட்டு மீண்டும் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், அதேபோல கடையில் இருந்த பெண்ணை தாக்கியதாகவும் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஜெயந்தி மற்றும் ஜம்பு கண்டி பகுதியில் உள்ள பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இன்று புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து ஜெயந்தி கூறும்போது :-

நான் எந்த தவறும் செய்யாத போது எப்படி என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நான் மிரட்டியதாகவும் பணம் பறித்ததாகவும் பொய் சொல்கிறார்கள். அதேபோல, என்னிடம் இதுவரை போலீசார் எந்த விசாரணையும் நடத்தவில்லை. ஆனால் என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

என் வழக்குப்பதிவுக்குக்கு காரணம் மேலிடத்து பிரஷர் என்கிறார்கள். ஆகவே, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இந்த பொய் வழக்கு தொடர்பாக உரிய விசாரணை நடத்தி தீர்வு தர வேண்டும் என தெரிவித்தார்.

அதேபோல ஜெயந்தி ஜம்பு கண்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி போராட்டம் நடத்தியதால் தான் பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்கு கோவை சட்டமன்ற 

தொகுதி எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி தரப்பு தூண்டுதலே காரணம் எனவும் புகார் அளிக்க வந்தவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...