மேட்டுப்பாளையம் பவானி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய பெண்கள் உட்பட 51 பேரை பத்திரமாக மீட்கும் நடவடிக்கையில் தீயணைப்பு வீரர்கள்

கோவை : கோவை மாவட்டம் கவுண்டர் மில்ஸ் மற்றும் சாய்பாபா காலணி பகுதியை சேர்ந்த இரு குடும்பத்தை சேர்ந்த 51 பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட இன்று மதியம் விடுமுறை தினத்தை கொண்டாட மேட்டுப்பாளையம் வந்துள்ளனர்.


கோவை : கோவை மாவட்டம் கவுண்டர் மில்ஸ் மற்றும் சாய்பாபா காலணி பகுதியை சேர்ந்த இரு குடும்பத்தை சேர்ந்த 51 பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட இன்று மதியம் விடுமுறை தினத்தை கொண்டாட மேட்டுப்பாளையம் வந்துள்ளனர். 



இவர்கள் வீட்டிலேயே உணவினை சமைத்து எடுத்துகொண்டு மேட்டுப்பாளையம் வனபத்திரகாளியம்மன் கோவில் பின்புறம் உள்ள பவானி ஆற்றில் குளிப்பதற்காகவும் பொழுதை கழிப்பதற்காகவும் வந்துள்ளனர். 

அங்குள்ள காரமடை நீரேற்று நிலையத்திற்காக பம்பவுஸ் பகுதியில் பவானி ஆற்றில் இன்று மதியம் குளித்து கொண்டிருந்தனர். அப்போது ஆற்றில் தண்ணீர் வரத்து மிகவும் குறைவாக இருந்துள்ளது. இதன் பின்னர் அனைவரும் ஆற்றினை கடந்து அக்கறைக்கு உணவு உண்ண சென்றுள்ளனர். 

இதனை தொடர்ந்து அவர்கள் அங்கேயே பொழுதை கழித்து கொண்டிருந்த சூழலில் திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. படிப்படியாக நீரின் வேகம் அதிகரித்து தண்ணீர் ஆர்பரித்து வந்ததை கண்டு அதிர்ந்து போன அவர்கள் அக்கறையில் இருந்து மீண்டும் இக்கரைக்கு வர செய்வதறியாது தவித்தனர். 

இதனை தொடர்ந்து தாங்கள் வெள்ளத்தால் சிக்கி கொண்டது குறித்து மேட்டுப்பாளையம் தீயனைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து நிகழ்விடத்திற்கு வந்த தீயனைப்பு துறையினர் பரிசல் உதவியுடன் வெள்ளத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த பகுதியில் வெளியூரில் இருந்து வரும் பொதுமக்கள் அடிக்கடி இதுபோன்று மாட்டிகொள்வதால், இப்பகுதியில் பொதுமக்கள் நுழையாதுவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...