கோவை : விஜயதசமியை முன்னிட்டு கோவை சித்தாபுதூர் அருள்மிகு ஐயப்பன் திருக்கோவிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு நாவில் அரிசியால் எழுதி கல்வி துவங்கப்பட்டது.
கோவை : விஜயதசமியை முன்னிட்டு கோவை சித்தாபுதூர் அருள்மிகு ஐயப்பன் திருக்கோவிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு நாவில் அரிசியால் எழுதி கல்வி துவங்கப்பட்டது.

விஜயதசமி விழா நாடு முழுவதும் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய தினம் வித்யாரம்பம் எனப்படும் குழந்தைகளுக்கான கல்வி துவக்க நிகழ்ச்சிகள் பல்வேறு கோவில்களில் நடைபெற்று வருகிறது.

அதன்படி கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள அருள்மிகு ஐயப்பன் திருக்கோவிலில் வித்தியாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து அவர்களது நாக்கில் அரிசி மற்றும் தேன் மற்றும் தங்க ஊசி ஆகியவற்றால் அ, ஓம், ஹரி ஸ்ரீ ஆகியவற்றை எழுதி கல்வியை துவக்கினர்.

விஜயதசமி தினமான இன்றைய தினம் வித்தியாரம்பம் செய்தால் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்றும் அதன் காரணமாக தற்போது வித்யாரம்பம் செய்து பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க இருப்பதாகவும் பெற்றோர்கள் தெரிவித்தனர்.